மட்டன் மிளகு கிரேவி இப்படி செய்து பாருங்க.. ஒரு சோறு கூட இருக்காது..

Advertisement

மட்டன் மிளகு கிரேவி செய்வது எப்படி.? | Mutton Pepper Gravy Recipe in Tamil

பெரும்பாலானவர்களுக்கு அசைவம் என்றாலே பிடித்தமானது. அதில் சிக்கன், மட்டன், மீன் போன்ற அனைத்து அசைவ உணவுகளும் பிடிக்கும். அசைவ உணவுகளை எப்படி கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் மட்டனில் குழம்பு, கிரேவி, பிரியாணி போன்றவை செய்து சாப்பிட்ருப்போம். அதிலும் மட்டன் கிரேவி செய்தி சாப்பிட்ருப்பீர்கள். இன்றைய பதிவில் மட்டன் மிளகு கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள போகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

மட்டன் மிளகு கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

  1. 1 தேக்கரண்டி எண்ணெய்
  2.  பட்டை- 1 தேக்கரண்டி
  3. பட்டை மிளகாய்- 4
  4.  தனியா- 4 தேக்கரண்டி
  5.  மிளகு- 1 1/2 தேக்கரண்டி
  6.  பெருஞ்சீரகம்- 2 தேக்கரண்டி
  7.  பச்சரிசி- 2 தேக்கரண்டி
  8.  கருவேப்பிலை- 2 கைப்பிடி
  9.  தேங்காய் – 4 தேக்கரண்டி
  10.  இஞ்சி பூண்டு பேஸ்ட் –2 தேக்கரண்டி
  11. வெங்காயம் –2
  12.  தக்காளி-  2
  13. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  14. உப்பு – தேவையான அளவு
  15. மட்டன்- 1/2 கிலோ

மட்டன் மிளகு கிரேவி செய்வது எப்படி.?

mutton pepper gravy recipe in tamil

அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து கொள்ளவும். அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 1 பட்டை, 4 பட்டை மிளகாய், 4 தேக்கரண்டி தனியா, 1 1/2 தேக்கரண்டி மிளகு, 2 தேக்கரண்டி பெருஞ்சீரகம், 2 தேக்கரண்டி பச்சரிசி, 2 கைப்பிடி கருவேப்பிலை, 4 தேக்கரண்டி தேங்காய், சேர்த்து வதக்கி கொள்ளவும். வதக்கிய பொருட்கள் ஆறியதும்  தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.

கிரேவி செய்வதற்கு அடுப்பில் பாத்திரம் வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய வெங்காயம் 2 சேர்த்து சிவந்த நிறம் வரும் வரை வதக்கவும், பின் அதில் நறுக்கிய  தக்காளி 2 சேர்த்து சுருங்கிய பதம் வரும் வரி வதக்கவும். பின்பு 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு, மட்டன் சேர்த்து வதக்கவும்.

இந்த மாதிரி மட்டன் சுக்கா செய்து சாப்பிட்டு பாருங்கள்

அதனுடன் அரைத்து வைத்த பேஸ்ட், சிறிதளவு சேர்த்து பச்சை வாசனை தீர்ந்து, எண்ணெய் பிரித்த நிலை வரும் வரை கொதிக்க விடவும்.

தாளிப்பதற்கு 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து பொரிந்ததும், கருவேப்பிலை, பட்டை மிளகாய் 1, கொத்தமல்லி சேர்த்து வதக்கி விட்டு குழம்பில் சேர்க்கவும்.

ரம்ஜான் ஸ்பெஷல் 1kg மட்டன் பிரியாணி செய்முறை..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement