சுவையான மைசூர் பாக் செய்வது எப்படி?
Mysore Pak Recipe in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்னும் தீபாவளிக்கு சில நாட்கள் தான் இருக்கு. உங்கள் வீட்டில் ஸ்வீட் செய்யப்போறீங்களா? அப்படின்னா வெறும் மூன்று பொருள் மட்டும் போதும் அருமையான சுவையில் மைசூர் பாக் ட ரெசிபி வீட்டில் இருந்தபடியே மிக எளிமையாக செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்த்துவிடுவோம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – இரண்டு டம்ளர்
- கடலை எண்ணெய் – இரண்டு டம்ளர்
- சர்க்கரை – இரண்டு டம்ளர்
மைசூர் பாக் செய்முறை – Mysore Pak Recipe in Tamil:
ஸ்டேப்: 1
அடுப்பில் ஒரு அகலமான கடாய் வைத்து அவற்றில் இரண்டு டம்ளர் அளவுள்ள கடலை மாவை சேர்த்து வ்ருக்க வேண்டும், மாவானது வாசனை வரும் அந்த வாசனை வரும் அளவிற்கு மாவை வறுத்து எடுத்தால் போதும்.
ஸ்டேப்: 2
அதன் பிறகு அதனை ஒரு அகலமான பவுலில் சேர்க்கவும், பிறகு அதில் இரண்டு டம்ளர் கடலை எண்ணெயை சேர்த்து நன்றாக மாவை கலந்துவிடுங்கள்.
ஸ்டேப்: 3
அதன் பிறகு அடுப்பில் மற்றொரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு டம்ளர் சர்க்கரை மற்றும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து பாவு காய்ச்ச வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 4
சர்க்கரை பாகானது இரண்டு கம்பி பதத்திற்கு இருக்க வேண்டும் அந்த பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து, காய்ச்சிய பாகை கடலை மாவில் ஊற்றி அடுப்பில் வைத்து கிளறி விடுங்கள்.
ஸ்டேப்: 5
மாணவது ஓரளவு கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். பிறகு ஒரு பிளேட்டில் எண்ணெய் தடவி கிளறிய கடலை மாவை கொட்டி நன்றாக பரப்பி தட்டிவிடவும். பிறகு 1/2 மணி நேரம் கழித்து கேக் போல் கட் செய்து எடுக்கவும்.
ஸ்டேப்: 6
அவ்வளவு தான் சுவையான மைசூர் பாக் தயார் இந்த தீபாவளிக்கு இந்த ரெசிபியை ஒரு முறை உங்கள் வீட்டில் ட்ரை செய்யுங்கள் நன்றி.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
விரிசல் இல்லாமல் குண்டு குண்டு குலாப் ஜாமுன் செய்யணுமா? அப்போ இந்த டிப்ஸை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |