நெய் மீன் குழம்பு வைப்பது எப்படி | Nei Meen Kulambu Seivathu Eppadi

Nei Meen Kulambu Recipe in Tamil

நெய் மீன் குழம்பு எப்படி செய்வது | Nei Meen Kulambu in Tamil

Nei Meen Kulambu Recipe in Tamil: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் சுவையான நெய் மீன் குழம்பு எப்படி வைப்பது என்று இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம். மீன் குழம்பு என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. மீன்களில் ஏராளமான வகைகள் உள்ளன. ஒவ்வொரு மீன்களிலும் நம் உடலுக்கு தேவையான  சத்துக்கள் அடங்கியுள்ளது. அந்த வகையில் இந்த பதிவில் நெய் மீன் குழம்பு எப்படி வைப்பது என்று தெரிந்துகொள்ளுவோம் வாங்க..!

சுவையான செட்டிநாடு மீன் வறுவல் செய்முறை விளக்கம் 

நெய் மீன் குழம்பு வைக்க – தேவையான பொருள்:

  • நெய் மீன் – 1/2 கிலோ 
  • தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன் 
  • சின்ன வெங்காயம் – நறுக்கியது 6

அரைப்பதற்கு:

  • தேங்காய் துருவல் – 1 கப்
  • தனியா தூள் – 1 ஸ்பூன்
  • சீரக தூள் – 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 6
  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • கடுகு – தாளிப்பதற்கு தேவையான அளவு
  • புளி – 1 எலுமிச்சையின் அளவு 
  • உப்பு , கறிவேப்பிலை – தேவையான அளவு 

நெய் மீன் குழம்பு செய்முறை விளக்கம்:

Nei Meen Kulambu in Tamil

  • Step 1: நெய் மீன் குழம்பு வைப்பதற்கு முதலில் புளியை சிறிதளவு நீரில் கரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
  • Step 2: அடுத்து நெய் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • Step 3: இப்போது அரைக்க கொடுத்துள்ளதை நன்றாக மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • Step 4: இப்போது அடுப்பில் கடாயை வைத்து அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து கலக்கிவிடவும்.
மத்தி மீன் பயன்கள்
  • Step 5: இதோடு கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
  • Step 6: அடுத்ததாக கழுவி சுத்தம் செய்துள்ள நெய் மீன் துண்டுகளை சேர்த்து 10 நிமிடத்திற்கு நன்றாக கடாயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
  • Step 7: பின்பு வேறொரு கடாயில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு வெந்தயம் போட்டு தாளித்து அதனுடன் கருவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தினை சேர்த்து வதக்கவும்.
  • Step 8: வதக்கியதை குழம்பில் ஊற்றவும். சூப்பரான நெய் மீன் குழம்பு ரெடி. 
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்