கிராமத்து மீன் குழம்பு செய்வது எப்படி.? | Nethili Meen Kulambu Recipe in Tamil
பொதுவாக மீன் குழம்பு என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் கிராமத்தில் செய்கின்ற மீன் குழம்பிற்கு ஒரு தனி சுவை இருக்கும். அசைவ சாப்பாட்டில் மிகவும் ருசியானது என்றால் அது மீன் குழம்பு தான். நிறைய வகையான மீன்குழம்பு வகைகள் உள்ளன. ஆனால் நெத்திலி மீன் என்றால் அனைவரின் நாக்கிலும் எச்சில் ஊரும். அந்த வகையில் கிராமத்தில் வைக்கின்ற சுவையான நெத்திலி மீன் குழம்பு எப்படி செய்வது..? என்று தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். வாருங்கள் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl
Nethili Meen Kulambu Seivathu Eppadi:
நெத்திலி மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
- நெத்திலி மீன்- 1/2 கிலோ
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- வெந்தயம்- 1/2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 10
- பூண்டு- 5 பல்லு
- கறிவேப்பிலை- 1 கொத்து
- புளி- பெரிய நெல்லிக்காய் அளவு
- உப்பு- தேவையான அளவு
மீன் குழம்பு மசாலா அரைக்கத் தேவையான பொருட்கள்:
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 100 கிராம்
- பூண்டு- 8 பல்லு
- தக்காளி- 2
- மல்லித்தூள்- 3 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
நெய் மீன் குழம்பு வைப்பது எப்படி |
நெத்திலி மீன் குழம்பு வைப்பது எப்படி.?
ஸ்டேப்: 1
முதலில் சுத்தம் செய்த மீனை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து ஒரு 15 நிமிடம் வைத்து விடுங்கள். அதே வேளையில் புளியையும் ஊறவைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
மசாலா செய்வதற்கு, ஒரு மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் முழு சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இவை நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை இரண்டாக வெட்டி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 3
பிறகு அடுப்பை குறைவாக வைத்து அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்றாக கலந்து விடுங்கள். அதன் பின் இதை ஒரு 5 நிமிடம் ஆறவைத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாத மீன் வகைகள் என்ன தெரியுமா? |
ஸ்டேப்: 4
பிறகு அதே மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் வெந்தயம் சேர்த்து கொள்ளுங்கள். வெந்தயம் பொரிந்ததும் கருவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 6
அதனுடன் நாம் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். இவை நன்றாக வதங்கியதும் அதில் புளியை கரைத்து சேர்த்து உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப்: 7
5 நிமிடம் கழித்து நாம் ஊறவைத்த மீனை சேர்த்து 4 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சூப்பரான கிராமத்து நெத்திலி மீன் குழம்பு ரெடி..!
ஜிலேபி மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |