No Onion No Tomato Chutney
வெங்காயம் தக்காளி இல்லாமல் சட்னி மட்டுமில்லை எந்த குழம்பும் செய்ய முடியாது. சில பேர் வீட்டில் வெங்காயம் தக்காளி இருக்கிறது என்பதற்காக தினமும் இட்லி தோசைக்கு தக்காளி சட்னியே அரைப்பார்கள். தினமும் ஒரே சட்னியே அரைக்கிறேயே என்று கேட்பார்கள். இந்த மாதிரி புலம்புவர்களுக்கு உங்களுக்கு உதாஹவும் வகையில் வெங்காயம் தக்காளி இல்லாமல் ஒரு அருமையான சட்னி செய்வது எப்படியென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – 1 தேக்கரண்டி
- கடலைப்பருப்பு – 1/4 கப்
- வரமிளகாய் – 7-8
- பூண்டு – 8 பல்
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- புளி – 2 இன்ச்
- துருவிய தேங்காய் – 1/4 கப்
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை -சிறிதளவு
- பெருங்காயத் தூள் – 1/4 தேக்கரண்டி
சட்னி செய்முறை:
கடாயை வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, சூடானதும் 1/4 கப் கடலை பருப்பு, 7 காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். சிவந்த நிறம் வந்த பிறகு ஒரு பிளேட்டில் வைத்து விட வேண்டும்.
பின் பூண்டு பற்கள், 1/2 தேக்கரண்டி சீரகம், சிறிதளவு புளி சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு திருகிய தேங்காய் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
வதக்கிய பொருட்கள் எல்லாம் ஆறியதும், மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். முக்கியமாக இதனை நேவாக அரைக்காமல் கொஞ்சம் கொரகொரவென்று அரைத்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி, 1/2 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி உளுத்தப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வாய்த்த சட்னியை சேர்த்து கிளறி கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான சட்னி ரெடி!
| இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |














