பால் கொழுக்கட்டை செய்யும் முறை..! Paal Kolukattai Recipes in Tamil

பால் கொழுக்கட்டை செய்யும் முறை

சுவையான பால் கொழுக்கட்டை செய்யும் முறை (Paal Kolukattai Recipe In Tamil)..!

கொழுக்கட்டை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், இந்த சுவையுள்ள பால் கொழுக்கட்டை செய்யும் முறை (Paal Kolukattai Recipe In Tamil) பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

பால் கொழுக்கட்டை தயார் செய்ய தேவையான பொருட்கள்:

  1. கொழுக்கட்டை மாவு – 1/2 கப்
  2. நெய் – ஒரு தேக்கரண்டி.
  3. சூடான தண்ணீர் – தேவையான அளவு.
  4. வெல்லம் – 200 கிராம்.
  5. தண்ணீர் – தேவையான அளவு
  6. பால் – 1 1/2 கப்
  7. ஏலக்காய் தூள் – ஒரு தேக்கரண்டி
  8. தேங்காய் பால் – 1 1/2 கப்
சுவையான ரசமலாய் செய்வது எப்படி..! Rasmalai Recipe In Tamil..!

பால் கொழுக்கட்டை செய்முறை (Paal Kolukattai Recipe In Tamil):

பால் கொழுக்கட்டை செய்யும் முறை ஸ்டேப்:1

முதலில் பால் கொழுக்கட்டை செய்வதற்கு ஒரு சுத்தமான கிண்ணத்தில் கொழுக்கட்டை மாவு 1/2 கப், ஒரு ஸ்பூன் நெய், தேவையான அளவு உப்பு மற்றும் சூடான தண்ணீர் சிறிதளவு ஊற்றி சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பால் கொழுக்கட்டை செய்முறை ஸ்டேப்:2

இவ்வாறு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பால் கொழுக்கட்டை செய்யும் முறை ஸ்டேப்:3

இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 11/2 கப் பால் மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பால் நன்றாக கொதித்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அவற்றில் சேர்த்து 15 நிமிடங்கள் நன்றாக வேகவைக்கவும்.

பால் கொழுக்கட்டை செய்முறை ஸ்டேப்:4

15 நிமிடங்கள் கழித்த பிறகு ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள், 11/2 கப் தேங்காய் பால் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக கொதிக்கவிடவும்.

பால் கொழுக்கட்டை செய்யும் முறை ஸ்டேப்:5

இப்பொழுது இந்த கொழுக்கட்டைக்கு வெல்ல பாகு செய்ய வேண்டும். எனவே அடுப்பில் ஒரு கடையை வைத்து 1 கப் தண்ணீர் ஊற்றி 200 கிராம் வெல்லம் சேர்த்து, வெள்ளம் கரையும் வரை நன்றாக கொதிக்க விடவும்.

பால் கொழுக்கட்டை செய்முறை ஸ்டேப்:6

வெல்லம் நன்றாக கரைந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டி கொள்ளவும், இந்த வடிகட்டிய வெல்ல பாகை வேகவைத்துள்ள பால் கொழுக்கட்டையில் ஊற்றி ஒருமுறை நன்றாக கொதிக்க விடவும்.

அவ்வளவுதான் சுவையான பால் கொழுக்கட்டை தயார் அனைவருக்கும் சுடசுட அன்புடன் பரிமாறவும்.

பிஸ்கட் லட்டு செய்வது எப்படி ..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!