பாகற்காய் குழம்பு செய்வது எப்படி..? | Pagarkai Kulambu Recipe in Tamil | Pavakka Kulambu Seivathu Eppadi
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கசப்பில்லாமல் பாகற்காய் குழம்பு வைப்பது எப்படி.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். பாகற்காய் கசக்கும். இதனை பொரியல் செய்து கொடுத்தாலே யாரும் சாப்பிட மாட்டார்கள். இதில் குழம்பு வைத்தோம் என்றால் தொட்டு கூட பார்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா.? ஆனால், பின்வருமாறு கூறப்பட்டுள்ள முறைகளில் குழம்பு வைத்தீர்கள் என்றால் குழம்பு கசப்பு இல்லாமல் சுவையாக இருக்கும்.
பாகற்காயில் உடலுக்கு தேவையான வைட்டமின்களும் புரோட்டீன்களும் உள்ளது. ஆனால் பாகற்காய் என்றாலே கசக்கும் என்று பலபேர் இதை சாப்பிட மாட்டார்கள். இந்த பாகற்காயை வைத்து நீங்கள் பொரியல் செய்து இருப்பீர்கள்..! ஆனால் குழம்பு செய்து இருக்கிறீர்களா..! வாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய அளவிற்கு கசப்பில்லாமல் பாகற்காய் குழம்பு எப்படி செய்வது..? என்பதை இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்வோம்.
கசப்பில்லாத பாகற்காய் குழம்பு | Pagarkai Kulambu Seivathu Eppadi:
பாவக்காய் கொழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
- பாகற்காய் – தேவையான அளவு
- எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
- உளுந்து பருப்பு- 1/2 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- பூண்டு – 15 பல்லு
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி – 2
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- புளி – சிறிதளவு (நெல்லிக்காய் அளவு)
- தேங்காய் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- கருவேப்பில்லை – சிறிதளவு
பாவக்காய் குழம்பு செய்யும் முறை:
ஸ்டேப்: 1
முதலில் புளியை ஊறவைத்து கொள்ளுங்கள். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ பாகற்காயின் மருத்துவ பயன்கள்
ஸ்டேப்: 2
எண்ணெய் சூடானதும் அதில் நைசாக நறுக்கிய பாகற்காயை சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு போட்டு வதக்கிக்கொள்ளவும்.
ஸ்டேப்: 3
பாகற்காய் வதங்கியதும் அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள். பிறகு அந்த கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, உளுந்து பருப்பு, வெந்தயம், சீரகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 4
இவை நன்றாக பொரிந்ததும் அதில் பூண்டு, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து அடுப்பை குறைவாக வைத்து வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 5
வெங்காயம் பொன் நிறமாக வதங்கியதும், தக்காளியை அரைத்து அதில் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடுங்கள்.
வீட்டில் பாகற்காய் செய்தால் கசக்கிறதா? இதை ட்ரை பண்ணுங்க கசப்பே இருக்காது
ஸ்டேப்: 6
அடுத்து எண்ணெய் நன்றாக பிரிந்த கொதித்ததும் அதில் எடுத்துவைத்துள்ள மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். ஒரு கொதி வந்ததும் அதில் புளியை கரைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் தேவையான அளவு தண்ணீர், சேர்த்து கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப்: 7
அடுப்பில் உள்ள குழம்பு கொதித்ததும், வதக்கி வைத்த பாகற்காயை சேர்த்து அதனுடன் சிறிதளவு தேங்காயை அரைத்து தேங்காய் பாலை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 8
இதை 15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான பாகற்காய் கொழம்பு ரெடி..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |