இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு ஸ்பெஷலானா பலாப்பழம் பூரணம் கொழுக்கட்டை செய்து பாருங்கள்

palapalam kolukattai in tamil

பலாப்பழம் கொழுக்கட்டை செய்வது எப்படி.?

வணக்கம் நண்பர்களே..! விநாயகர் சதுர்த்திக்கு எப்பொழுதும் பூரணம் கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை, இலை கொழுக்கட்டை இப்படி தான் எல்லாம் வருடமும் செய்கிறோம். இந்த வருடம் விநாயகர் சதுர்த்திக்கு முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வைத்து சுவையான கொழுக்கட்டை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்…

இதையும் செய்து பாருங்கள் ⇒ இலையில் விநாயகருக்கு பிடித்த பூரணம் கொழுக்கட்டையை இப்படி செய்து பாருங்கள்

பலாப்பழம் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு – 1 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • நெய் – 2 தேக்கரண்டி
  • தண்ணீர் –  தேவையான அளவு

பலாப்பழம் பூரணம் செய்ய தேவையான பொருட்கள்:

  • பலாச்சுளை – 5 பொடியாக நறுக்கியது
  • தேங்காய்த் துருவல் – 3 தேக்கரண்டி
  • வெள்ளம் – 1/2 கப்
  • நெய் – 3 தேக்கரண்டி
  • ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

பலாப்பழம் கொழுக்கட்டை செய்முறை:

ஸ்டேப்:1

முதலில் வெந்நீரில் அரிசி மாவை பிசைந்து கொள்ளவும். இதில் தேவையான அளவு உப்பு, நெய் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

ஸ்டேப்:2

அடுப்பை பத்த வைத்து கடாயை வைக்க வேண்டும். அதில் நெய் ஊற்றி துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய பலாப்பழம் சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்:3

பின் நறுக்கிய வெல்லம், ஏலக்காய் தூள் சேர்க்கவும். ஒட்டாத அளவுக்கு திரண்டு வரும் பதத்தில் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

ஸ்டேப்:4

பிறகு பூரணம் ஆறியதும், பிசைந்து வைத்த மாவில் எந்த வடிவில் வேண்டுமோ அந்த வடிவில் பிடுத்து உள்பக்கத்தில் பூரணத்தை வைத்து மூடவும்.

ஸ்டேப்:5

பின் பிடித்து வைத்த கொழுக்கட்டையை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும். 10 நிமிடம் கழித்து பார்த்தால் சுவையான பலாப்பழம் கொழுக்கட்டை தயார் ருசிக்கலாம் வாங்க…

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்