பால்கோவா செய்முறை | Palkova Seivathu Eppadi?
Palkova Recipe in Tamil:- தீபாவளி என்றாலே மகிழ்ச்சி நிறைந்த நாள் என்று சொல்லலாம்.. என்ன தான் கடைகளில் பலவகையான பலகாரங்கள் விற்பனை செய்யப்பட்டாலும். வீட்டில் செய்து சாப்பிடும் சுகமே தனிதான்.. அந்த வகையில் இந்த பதிவில் இந்த தீபாவளியை மகிழ்ச்சியாகவும்.. ஆரோக்கியமாகவும் கொண்டாட பால்கோவா செய்வது எப்படி என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.. சரி வாங்க பால்கோவா செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் அதன் செய்முறை விளக்கங்களை தெளிவாக படித்தறியலாம்..
5 நிமிடத்தில் தீபாவளி பலகாரம் செய்வது எப்படி? |
தேவையான பொருட்கள்
- பால் – ஒரு லிட்டர்
- சீனி (வெள்ளைச் சர்க்கரை) – 100 முதல் 150 கிராம் வரை
- எலுமிச்சம் பழம் – ½ பழம் (நடுத்தர அளவு)
- நெய் – 2 டீஸ்பூன்
பால்கோவா செய்முறை விளக்கம் – Palkova Seivathu Eppadi
ஸ்டேப்: 1
பால்கோவா தயார் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்ச வேண்டும்.
ஸ்டேப்: 2
பாலினைக் காய்ச்சும் போது பாலில் கொதி வந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கரண்டி போட்டு கிண்ட வேண்டும்.
தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் செய்வது எப்படி?
ஸ்டேப்: 3
பால் கொதித்ததும் கிளறும் போது (கிண்டாமல் விட்டால் பால் அடிப்பிடித்து விடும். பால்கோவாவின் சுவையும், நிறமும் மாறிவிடும்.) 10 நிமிடங்கள் கழித்து எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட வேண்டும்.
எலுமிச்சை ஊற்றியதும் பால் திரிந்து தண்ணீர் விடும்.
ஸ்டேப்: 4
பாலுடன் எலுமிச்சை சாறு சேர்த்ததும் பின்னர் 10 நிமிடங்கள் சிறுதீயில் வைத்து கிளற வேண்டும்.
பிறகு வற்றியதும் நெய் சேர்த்து ஒருசேரக் கிளற வேண்டும்.
ஸ்டேப்: 5
அவற்றில் நெய் சேர்த்த பின்னர் அதனுடன் சீனியைக் போட்டுக் கிளற வேண்டும்.
சீனியைச் சேர்த்ததும் கலவை தளதளவென வந்ததும் இறக்கி விட வேண்டும். இப்பொது சுவையான பால் கோவா தயார் ஆனது.
தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி? |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |