Paneer Gravy Incredients In Tamil | Simple Paneer Gravy Recipe in Tamil
இந்த பன்னீர் சாதம், தோசை, சப்பாத்தி, பிரியாணி போன்ற எல்லாவற்றிக்கும் தொட்டு சாப்பிடலாம். அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை போன்றவற்றை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்ளலாம்.
- எண்ணெய் – 4 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1தேக்கரண்டி
- உப்பு – 1/4 தேக்கரண்டி
- பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
- பெரிய வெங்காயம் – 1
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
- மல்லித் தூள் – 2 தேக்கரண்டி
- சீரகத் தூள் – 1 தேக்கரண்டி
- மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா- 1 தேக்கரண்டி
- பட்டை – சிறிதளவு
- கிராம்பு -2
- ஏலக்காய் -2
- பிரியாணி இலை -1
பன்னீர் கிரேவி செய்முறை:
முதலில் கடாயில் 4தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு, வெங்காயம் போன்றவை சேர்த்து வதக்க வேண்டும். இதன் கூடவே இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு சிறிதளவு சேர்த்து வதக்க வேண்டும் எண்ணெய் பிரியும் நிலை வந்ததும், மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள், மல்லி தூள் 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கொள்ள வேண்டும்.
அடுத்து 2 தக்காளியை அரைத்து பேஸ்ட்டாக சேர்த்து கொள்ள வேண்டும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். அதன் பிறகு 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து கொஞ்ச தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஒரு மிக்சி ஜாரில் சீரகம் 1தேக்கரண்டி, பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1தேக்கரண்டி சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். இதனையும் வேகின்ற கிரேவியில் சேர்க்க வேண்டும். அதனுடன் 200 கிராம் பன்னீர் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கி விட வேண்டும். அவ்ளோ தாங்க பன்னீர் கிரேவி ரெடி! இதனை சாதம், தோசை, சப்பாத்தி, பிரியாணி போன்ற எல்லாவற்றிற்கும் தொட்டு சாப்பிடலாம்.
| இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |














