ஹோட்டல் ஸ்டெயில் பன்னீர் பெப்பர் மசாலா 10 நிமிடத்தில் செய்வது எப்படி?

Advertisement

Paneer Pepper Masala Recipe in Tamil

வீட்டில் பன்னீர் வைத்து நிறைய விதமான டிஸ் செய்து சாப்பிட்டிருப்போம், ஆனால் பெப்பர் சிக்கன் போல் பன்னீர் பெப்பர் டிஸ் செய்ய போகிறோம். அது எப்படி  செய்வது என்று நிறைய கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு மாடலில் சிலர் சமைப்பார்கள் அந்த வகையில் இன்று நாம் சூப்பரான பன்னீர் பெப்பர் செய்வது என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!

Paneer Pepper Masala Recipe in Tamil:

தேவையான பொருட்கள்: 

 1. பன்னீர் – 200 கிராம்
 2. வெங்காயம் – 4
 3. தக்காளி – 2
 4. பூண்டு – 5 அல்லது 6
 5. இஞ்சி – 4 துண்டு
 6. பச்சை மிளகாய் –
 7. சீரகம்  – 1/4 டீஸ்பூன்
 8. கஸ்தூரி மேத்தி இலை – சிறிதளவு
 9. இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 3/4 டீஸ்பூன்
 10. மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
 11. கொத்தமல்லி தூள் – 1/2 டீஸ்பூன்
 12. மிளகாய் தூள் – 3/4 டேபிள் ஸ்பூன்
 13. மிளகு தூள் – 3/4 டீஸ்பூன் ஸ்பூன்
 14. முந்திரி பருப்பு – 15 அல்லது 20 (அரைத்த பேஸ்ட்)
 15. கொத்தமல்லி – தேவையான அளவு
 16. வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
 17. உப்பு  – தேவையான அளவு
 18. எண்ணெய் – தேவையான அளவு

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

செய்முறை:

ஸ்டேப்: 1

முதலில் 3 வெங்காயத்தை நறுக்கி எடுத்துக்கொள்ளவும். அதன் பின் தக்காளி 2 நறுக்கி எடுத்துக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து கடாயில் வேகவைக்கும் அளவு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவிடுங்கள்.

ஸ்டேப்: 2

வேகவைத்த பொருட்களை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 3

கடாயில் வதக்குவதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பின்பு அதில் சீரகம் 1 டீஸ்பூன் சேர்க்கவும். அது கொஞ்சம் பொன்னிறமாக மாறிய பின் அதில் மீதி இருக்கும் 1 வெங்காயத்தை அதில் சேர்க்கலாம்.

ஸ்டேப்: 4

வெங்காயம் பொன்னிறமாக மாறிய பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும். அதன் கூடவே மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன். மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன், மல்லி தூள் 1 டேபிள் ஸ்பூன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வதக்கிக்கொள்ளவும்.

இப்படி செய்ங்க காளான் கிரேவியை – செம்ம டேஸ்ட்..!

 

ஸ்டேப்: 5

ஓரளவு வெந்த பின் அதில் நாம் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்க்கவும். சிறிது நேரம் கலந்து விட்டு கொதிக்கவிடவும்.

ஸ்டேப்: 6

 paneer pepper masala recipe in tamil

ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதன் பின் கொஞ்சம் கொதித்த பின் அதில் முந்திரி பேஸ்ட் சேர்க்கவும். அது கெட்டியான ஒரு பதத்திற்கு வரும் வரை கலந்துவிடவும்.

ஸ்டேப்: 7

பின்பு அதில் வெண்ணெய் சேர்க்கவும், அதன் பின் அதில் கஸ்தூரி மேத்தி இலை சிறிதளவு சேர்க்கவும்.

ஸ்டேப்: 8

பிறகு அதில் நறுக்கி வைத்த பன்னீரை சேர்க்கவும். ஓரளவு கலந்த பின் மிளகு தூள் 3/4 டீஸ்பூன் சேர்க்கவும் அதன் கூடவே வெண்ணெய் கொஞ்சம் சேர்க்கவும் காரத்திற்கு தேவையான அளவு பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்.

கடைசியாக கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். இப்போது ஒரு நல்ல பேஸ்ட் போல் வந்திருக்கும். இதனை நாம் சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட்டால் டெஸ்ட் அருமையாக இருக்கும் வீட்டில் செய்து பாருங்கள்.

இதையும் செய்து பாருங்கள் 👉👉 சப்பாத்தி, பூரிக்கு இந்த மாதிரி சென்னா மசாலா செஞ்சி சாப்பிட்டு பாருங்க..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement