பலவகையான பன்னீர் ரெசிபி செய்முறை தெரிஞ்சிக்கலாம் வாங்க..!

பன்னீர் டிக்கா செய்முறை

பன்னீர் டிக்கா செய்முறை (paneer tikka) விளக்கம்..!

பன்னீர் டிக்கா (paneer tikka) மிகவும் சுவையான ஒரு சைனீஸ் டிஷ். இதுவரை இந்த பன்னீர் டிக்காவை ஹோட்டலில் மட்டும் தான் வாங்கி சாப்பிட்டிருப்பீர்கள். இனி இந்த சுவையான பன்னீர் டிக்காவை, வீட்டிலேயே ஈஸியாக செய்து சாப்பிடலாம்.

சரி வாங்க பன்னீர் டிக்கா செய்முறை (paneer tikka) பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம்.

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி இதோ..!

பன்னீர் டிக்கா செய்முறை

பன்னீர் டிக்கா ரெசிபி செய்ய தேவையான பொருட்கள்:-

 1. தயிர் – 1/2 கப்
 2. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
 3. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
 4. பன்னீர் – 250 கிராம் சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்
 5. கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
 6. சீரகம் தூள் – 1 ஸ்பூன்
 7. சோம்பு – 1/2 ஸ்பூன்
 8. எண்ணெய் – தேவையான அளவு
 9. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
 10. எலுமிச்சை சாறு – 1/2 பழம் அளவு
 11. உப்பு – தேவையான அளவு
 12. கடலை மாவு – 1 1/2 ஸ்பூன்
 13. மல்லி தூள் – 1/2 ஸ்பூன்
 14. Bamboo Skewers – 5
 15. குடைமிளகாய் – 2 சதுரமாக நறுக்கி கொள்ளவும்
 16. பெரிய வெங்காயம் – சதுரமாக நறுக்கி கொள்ளவும்
 17. தக்காளி – சதுரமாக நறுக்கி கொள்ளவும்
சுவையான சமையல் சிக்கன் லாலிபாப் செய்முறை விளக்கம்..!

பன்னீர் டிக்கா செய்முறை (paneer tikka) விளக்கம்:-

பன்னீர் டிக்கா செய்முறை ஸ்டேப்: 1

இந்த பன்னீர் டிக்கா செய்முறை மிகவும் எளிமையாக இருக்கும். சரி வாங்க எளிமையான இந்த பன்னீர் டிக்கா செய்முறை விளக்கத்தை இப்போது நாம் படித்தறிவோம்.

இந்த பன்னீர் டிக்கா (paneer tikka) செய்வதற்கு முதலில், ஒரு சுத்தமான பௌளை எடுத்து கொள்ளவும் அவற்றில் 1/2 கப் தயிர் ஊற்றி, அதனுடன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 மல்லி தூள், 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள், 1 ஸ்பூன் சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன், சோம்பு 1/4 ஸ்பூன்,  ஒரு ஸ்பூன் ஆயில், 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு கரண்டியை பயன்படுத்தி நன்றாக கலந்து கொள்ளவும்.

பன்னீர் டிக்கா செய்முறை ஸ்டேப்: 2

பின்பு அதனுடன் 1 1/2 ஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பன்னீர் டிக்கா செய்முறை ஸ்டேப்: 3

பின்பு அதனுடன் சதுர வடிவில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் மற்றும் பன்னீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பன்னீர் டிக்கா செய்முறை ஸ்டேப்: 4

பிறகு இந்த கலவையை 1/2 நேரம் நன்றாக ஊறவைக்க வேண்டும்.

பன்னீர் டிக்கா செய்முறை ஸ்டேப்: 5

1/2 மணி நேரம் கழித்த பின், அவற்றை எடுத்து Bamboo Skewers இந்த குச்சியில் சொருகிவிட வேண்டும்.

பன்னீர் டிக்கா செய்முறை ஸ்டேப்: 6

அதாவது இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வெங்காயம், தக்காளி, பன்னீர் ஆகியவற்றை சொருகி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பன்னீர் டிக்கா செய்முறை ஸ்டேப்: 7

பின்பு அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து, தோசை கல் நன்றாக சூடேறியதும்  குச்சியில் சொருகி வைத்துள்ளதை எடுத்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி வேகவைக்க வேண்டும்.

பன்னீர் டிக்கா செய்முறை ஸ்டேப்: 8

இவ்வாறு ஒவ்வொரு பக்கமும் திருப்பி போட்டு வேகவைக்க வேண்டும்.

அவ்வளவு தான் சுவையான பன்னீர் டிக்கா செய்முறை (paneer tikka) முடிந்துவிட்டது. அருமையான இந்த சைனீஸ் பன்னீர் டிக்காவை (paneer tikka) அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்.

சுவையான மொறு மொறு கட்லெட் செய்முறை..!

 பன்னீர் பட்டர் மசாலா செய்முறை (paneer butter masala)

பன்னீர் மசாலா (paneer butter masala) மிகவும் சுவையான ஒரு டிஷ். இதுவரை இந்த பன்னீர் மசாலாவை ஹோட்டலில் மட்டும் தான் வாங்கி சாப்பிட்டிருப்பீர்கள். இனி இந்த சுவையான பன்னீர் மசாலாவை, வீட்டிலேயே ஈஸியாக செய்து சாப்பிடலாம்.

சரி வாங்க பன்னீர் டிக்கா (paneer butter masala) செய்வது எப்படி என்று இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம்.

சைனீஸ் ஸ்பெஷல் டிராகன் சிக்கன் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

 1. பன்னீர் – 200 கிராம்
 2. பெரிய வெங்காயம் – 200 கிராம்
 3. தக்காளி – 100 கிராம்
 4. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
 5. மல்லி இலை – ஒரு கொத்து
 6. எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு
 7. உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு:

 1. வெண்ணெய் – ஒரு மேஜைகரண்டி
 2. பெருஞ்சீரகம் (அ) சோம்பு – ½ தேக்கரண்டி
 3. பட்டை – ஒரு துண்டு
 4. கிராம்பு – 1 எண்ணம்
 5. கல்பாசி – சிறிதளவு
 6. அன்னாசிப்பூ – 1 எண்ணம்
 7. ஏலக்காய் – 1 எண்ணம்
 8. சாதிப்பத்திரி – சிறிதளவு
 9. பிரின்சி இலை – சிறிதளவு

மசாலா செய்வதற்கு:

 1. மல்லித்தூள் – 2 மேஜைகரண்டி
 2. சீரகத்தூள் – 1 மேஜைகரண்டி
 3. கரம் மசாலா – 1 மேஜைகரண்டி
 4. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
 5. மிளகாய்த்தூள் – 1 மேஜைகரண்டி

பன்னீர் பட்டர் மசாலா செய்முறை விளக்கம்..!

பன்னீர் பட்டர் மசாலா செய்முறை (paneer butter masala) ஸ்டேப்: 1

பன்னீரை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்து சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியைக் கழுவி சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். மல்லி இலையை பொடியாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.

பன்னீர் பட்டர் மசாலா செய்முறை (paneer butter masala) ஸ்டேப்: 2

அதன் பிறகு பன்னீரை எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுத்து பின் அதனை கொதிக்க வைத்த நீரில் போடவும். இரண்டு நிமிடங்கள் கழித்து பன்னீரை வெளியே எடுத்து நீரினைப் பிழிந்து விடவும்.

பன்னீர் பட்டர் மசாலா செய்முறை (paneer butter masala) ஸ்டேப்: 3

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சதுரங்களாக வெட்டிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கிய நிலையில் தக்காளி சேர்த்து வதக்கவும்.வெங்காயம், தக்காளி கலவை ஆறியவுடன் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

பன்னீர் பட்டர் மசாலா செய்முறை (paneer butter masala) ஸ்டேப்: 4

அடுப்பில் குக்கரை வைத்து வெண்ணெயைச் சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரின்சி இலை, சாதிப்பத்திரி, அன்னாசிப்பூ, கல்பாசி சேர்த்து தாளிக்கவும்.

சுவையான முட்டை மஞ்சூரியன் எப்படி செய்வது?

பன்னீர் பட்டர் மசாலா செய்முறை (paneer butter masala) ஸ்டேப்: 5

பின் அதனுடன் வெங்காயம், தக்காளி மசாலாக் கலவை, கீறியுள்ள பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். மல்லித்தூள், மிளகாய்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

பன்னீர் பட்டர் மசாலா செய்முறை (paneer butter masala) ஸ்டேப்: 6

குக்கரை மூடி விடவும். ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். குக்கரின் ஆவி அடங்கியவுடன் குக்கரைத் திறந்து அதனுடன் வறுத்து பிழிந்து வைத்துள்ள பன்னீரைச் சேர்க்கவும்.

பன்னீர் பட்டர் மசாலா செய்முறை (paneer butter masala) ஸ்டேப்: 7

கிரேவி கொதித்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். சுவையான பன்னீர் பட்டர் மசாலா ரெடி.

இந்த பன்னீர் மசாலாவை சப்பாத்தி, தோசை, புரோட்டா, நாண் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.சுவையான பன்னீர் கிரேவி செய்முறை:-

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய பன்னீர் கிரேவி செய்வது எப்படி என்று இப்போது நாம் படித்தறிவோம் வாங்க…

தேவையான பொருட்கள்:

 1. பன்னீர் – 300 கிராம்
 2. சீரகம் – ஒரு ஸ்பூன்
 3. ஏலக்காய் – 2
 4. கிராம்பு – 2
 5. பட்டை – சிறிய துண்டு
 6. வெங்காயம் – பொடிதாக நறுக்கியது ஒரு கப்
 7. இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
 8. மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன்
 9. மல்லித்தூள் – 1 ஸ்பூன்
 10. சீரகத்தூள் – 1/4 ஸ்பூன்
 11. தக்காளி – 4 (நன்கு பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளவும்)
 12. மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
 13. உப்பு – தேவையான அளவு.
 14. கரம் மசாலா – 1/4 ஸ்பூன்
 15. முந்திரி பவுடர் – 4 ஸ்பூன்
 16. எண்ணெய் – தேவையான அளவு
 17. தண்ணீர் – தேவையான அளவு
 18. கஸ்தூரி மேத்தி – சிறிதளவு

பன்னீர் மசாலா கிரேவி செய்முறை (Paneer Gravy In Tamil) ஸ்டேப்: 1

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடேறியது ஒரு ஸ்பூன் சீரகத்தூள், இரண்டு ஏலக்காய், இரண்டு கிராம்பு மற்றும் சிறிதளவு இலவங்க பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

பன்னீர் மசாலா கிரேவி செய்முறை (Paneer Gravy In Tamil) ஸ்டேப்: 2

பின்பு ஒரு கப் வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து வெங்காயம் நன்கு வதங்கும் வரை வதக்க வேண்டும்.

பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு வதக்கவும்.

பன்னீர் மசாலா கிரேவி செய்முறை (Paneer Gravy In Tamil) ஸ்டேப்: 3

பின்பு 1 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லி தூள், 1/4 ஸ்பூன் சீரகத்தூள் ஆகிய மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

பிறகு கடாயை ஒரு மூடியை கொண்டு மூடி 2 நிமிடம் அடுப்பை மிதமான சூட்டில் மசாலாவை வேகவைக்கவும்.

பன்னீர் மசாலா கிரேவி செய்முறை (Paneer Gravy In Tamil0 ஸ்டேப்: 4

இரண்டு நிமிடம் கழித்து அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கிளறிவிடவும், பின்பு அதனுடன் மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் சேர்த்து நன்றாக இரண்டு நிமிடம் வரை கிளறிவிட வேண்டும்.

இப்பொழுது நாம் 300 கிராம் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இந்த மசாலாவுடன் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

பன்னீர் மசாலா கிரேவி செய்முறை (Paneer Gravy In Tamil) ஸ்டேப்: 5

பிறகு வறுத்து பொடி செய்து வைத்துள்ள முந்திரி பவுடரை 4 டேபிள் ஸ்பூன் சேர்த்து, நன்றாக கிளறிவிடவும். இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி, இரண்டு கொதி வந்த பிறகு, கஸ்த்தூரி மேத்தியை பொடி செய்து தூவி, திரும்ப ஒரு முறை கொதிக்கவைத்து இறக்கினால் சுவையான பன்னீர் கிரேவி தயார்.

இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.பன்னீர் 65 செய்வது எப்படி (paneer 65)?

மழைக்காலங்களில் மாலை நேரத்தில் நாவிற்கு சுவையாகவும், இதமாகவும் இருக்கும் (paneer 65) பன்னீர் 65 செய்வது எப்படி என்று இப்போது நாம் இந்த பகுதியில் தெரிஞ்சிக்க வாங்க…

இந்த சுவையான பன்னீர் 65 (paneer 65) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சரி வாங்க பன்னீர் 65 செய்முறை (paneer 65) விளக்கத்தை தெளிவாக படித்தறிவோம் வாங்க..!

பன்னீர் 65 செய்முறை (paneer 65) விளக்கம்:

பன்னீர் 65 செய்ய தேவையான பொருட்கள்:

 1. 200 கிராம் – பன்னீர்
 2. சோளம் மாவு அல்லது மைதா மாவு – 4 ஸ்பூன்
 3. அரிசி மாவு – இரண்டு ஸ்பூன்
 4. கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
 5. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
 6. மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
 7. கருவேப்பிலை – சிறிதளவு
 8. பச்சை மிளகாய் – இரண்டு பொடிதாக நறுக்கியது
 9. எலுமிச்சை சாறு – 1/2 மூடி
 10. தேவையான அளவு – உப்பு மற்றும் தண்ணீர்
 11. எண்ணெய் – 1/2 லிட்டர்

பன்னீர் 65 செய்முறை (paneer 65) விளக்கம்:

பன்னீர் 65 செய்முறை ஸ்டேப்: 1

முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளவும்.

அவற்றில் 4 ஸ்பூன் சோளம் மாவு, இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் கரம் மசாலா, பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சிறிதளவு, எலுமிச்சை சாறு 1/2 மூடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பன்னீர் 65 செய்முறை ஸ்டேப்: 2

அதன் பிறகு பொடிதாக நறுக்கி வைத்துள்ள 200 கிராம் பன்னீரை சேர்த்து பிசைய வேண்டும்.

அவ்வளவுதான் கலவை தயாராகிவிட்டது.

பன்னீர் 65 செய்முறை ஸ்டேப்: 3

இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடேறியதும், அவற்றில் பிசைந்து வைத்துள்ள பன்னீரை ஒவ்வொன்றாக சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும்.

அவ்வளவுதான் சுவையான பன்னீர் 65 தயார்… இப்போது அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!