பன்னீர் கோலா உருண்டை செய்வது எப்படி..?

பன்னீர் கோலா உருண்டை

பன்னீர் கோலா உருண்டை

வணக்கம். உங்கள் வீட்டில் குழந்தைகள் மற்றும் பெரியோர் தினமும் எதாவது ஒரு ஸ்நாக்ஸ் வேண்டுமென்று
கேட்பவர்களா ? அப்போ இனி கவலையை விடுங்க இதோ ரொம்ப ஈஸியான ஹெல்தியான ஸ்நாக்ஸ்.

வீட்டில் விருந்தாளிகள் வந்தால் கூட இதை கொடுத்து அசத்துங்க.
இதோ ஈஸியான ரொம்பவே சுவையான பன்னீர் கோலா உருண்டை செய்வதற்கான ஐடியா.

பன்னீர் கோலா உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:

1. பன்னீர் துருவியது – 1 கப்
2. உடைத்த கடலை மாவு – 4 ஸ்பூன்
3. உப்பு – தே.அளவு
3. பெரிய வெங்காயம் – பொடியாக நறுக்கியது(தேவைக்கேற்ப)
5. இஞ்சி பூண்டு விழுது – 1 கப்
6. பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப (நறுக்கியது)
7. கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்
8. கொத்த மல்லி தழை – சிறிது
9. எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு

வித்தியாசமான கற்றாழை பருப்பு பாயசம்..!

பன்னீர் கோலா உருண்டை செய்முறை :

முதலில் ஒரு பவுலில் துருகிய பன்னீருடன் உடைத்த கடலை மாவு சேர்க்கவும் .

பிறகு அதனுடன் வெங்காயம்,பச்சை மிளகாய் ,உப்பு ,கரம் மசாலா தூள்,இஞ்சி பூன்டு விழுது, கொத்தமல்லி தழை ஆகியவற்றை நன்றாக சேர்த்து பிசையவும்.

(குறிப்பு : இதில் வெங்காயம் மற்றும் பன்னீரில் நீர்த்தன்மை இருப்பதால் தண்ணீர் சேர்க்க தேவையில்லை)

பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி

பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, நன்றாக எண்ணெய்யை காயவிடுங்கள்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும், பிடித்து வைத்த கோலா உருண்டைகளை கடாயில் போட்டு பொன் நிறமாக நன்கு பொரித்து எடுக்கவும். பிறகு மீதமுள்ள உருண்டைகளும் பொரிக்கவும்.

இப்போது சுவையான பன்னீர் கோலா உருண்டை தயார்.

உங்களுது விருப்பத்திற்கு ஏற்ப பரிமாருங்கள் உங்கள் பிரண்ட்ஸ்க்கு.

பிரஷர் குக்கர் வேண்டாம், மைக்ரோ ஓவன் வேண்டாம் கேக் செய்யலாம் வாங்க..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.