பரோட்டா செய்வது எப்படி? | Parotta Seivathu Eppadi in Tamil
பரோட்டா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம். கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா, சிலோன் புரோட்டா, மலபார் புரோட்டா, காயின் புரோட்டா, வீச்சு புரோட்டா, லாபா புரோட்டான்னு ஒரு லிஸ்டே இருக்கு. பரோட்டா எல்லோருக்கும் பிடித்த உணவு என்றாலும் அதை செய்வது கடினம் என்று யாரும் வீட்டில் செய்து கொடுப்பதில்லை. ஆனால் பலருக்கும் தெரியாது இதை வீட்டிலேயும் மிக எளிதாக செய்து விடலாம் என்று. அந்த வகையில் இந்த தொகுப்பில் வீட்டிலேயே எப்படி பரோட்டா செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
பரோட்டா செய்ய தேவையான பொருட்கள்:
- மைதா – 2 கப்
- எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
ஸ்டேப்: 1
- பரோட்டா செய்வது எப்படி ? ஒரு பாத்திரத்தில் மைதா 2 கப் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
- பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையவும். இதை 10 – 15 நிமிடம் இழுத்து இழுத்து பிசையவும் அப்போது தான் பரோட்டா Soft-ஆக வரும்.
ஸ்டேப்: 2
- பிசைந்து முடித்த பிறகு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும். பின்பு ஈரத்துணியைக் கொண்டு ஒரு மணி நேரம் மாவை ஊற விட வேண்டும்.
ஸ்டேப்: 3
- அதன் பின்பு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். அதன் மேல் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். இதை ஒரு அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 4
- parotta seivathu eppadi: பின்னர் அந்த மாவை மேசையில் அல்லது தட்டின் பின்புறத்தில் மாவை வைத்து கையால் பரப்பி கொள்ளவும் (எந்த அளவிற்கு லேசாக பரப்ப முடியுமோ அந்த அளவிற்கு பரப்பி கொள்ளுங்கள்)
ஸ்டேப்: 5
- பின்பு அதன் மேலே சிறிதளவு எண்ணெய்யை தேய்த்து ஒரு கத்தியின் மூலம் செங்குத்தான வாக்கில் அதில் கோடுகளை போடவும்.
- கோடுகளை போட்ட பின் அதை அப்படியே புரட்டி நீல வாக்குக்கு கொண்டு வந்து அதை பாம்பு போல சுருட்டி ஒரு தட்டில் எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும். இதை ஒரு 15 நிமிடம் ஊறவைக்கவும்.
ஸ்டேப்: 6
- 15 நிமிடம் கழித்து பரோட்டாவை கையால் அல்லது சப்பாத்தி கட்டையால் பரப்பி கொள்ளுங்கள். பின்பு தோசை கல்லில் மிதமான சூட்டில் பரப்பிய மாவை வேக வைத்து எடுத்க்கவும். ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.
ஸ்டேப்: 7
- பரோட்டாவை சுட்ட பின்பு கையால் இருபுறமும் தட்டி கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான soft ஆன பரோட்டா தயார் இதை குருமா வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
- இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
இனி பரோட்டா செய்ய மாவு பிசைய வேண்டாம்.. இந்த ட்ரிக்கை ட்ரை பண்ணுங்க |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |