பருப்பு போளி செய்வது எப்படி? | Paruppu Poli Seivathu Eppadi Tamil
மாலை நேரம் ஆகிவிட்டது என்றால் அனைவருக்குமே ஏதாவது சாப்பிடுவதற்கு தோன்றும் ஆனால் அந்த நேரத்தில் சாப்பாடு போட்டு சாப்பிடு சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்..! ஆனால் நமக்கு வடை, பஜ்ஜி சாப்பிட தோன்றும், சிலருக்கு இனிப்பு சாப்பிட பிடிக்கும்.
அதற்காக அதிக இனி சாப்பிடால் திகட்டும் அளவிற்கு இருக்க கூடாது. ஓரளவு இனிப்பு இருந்தால் போதுமானத இருக்கும் என்று சொல்வார்கள்.
பருப்பு போளி செய்வது எப்படி?
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
- மைதா – 1/4 கிலோ
- கடலை பருப்பு – 150 கிராம்
- வெல்லம் – இனிப்பு தேவையான அளவு
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
- ஆயில் – தேவையான அளவு
- நெய் – தேவையான அளவு
செய்முறை:
ஸ்டேப்: 1
முதலில் கடலைப்பருப்பை கழுவிட்டு ஊறவைக்கவும். அல்லது குக்கரில் தண்ணீர் ஊற்றி 3 அல்லது 4 விசில் விட்டு இறக்கவும். பருப்பு குழைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டேப்: 2
ஒரு பாத்திரத்தில் மைதாவை எடுத்துக்கொள்ளவும். பின்பு அதில் மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவும். பின்பு மாவிற்கு ஏற்ற தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு தேவையான பதத்தில் பிசைந்துகொள்ளவும்.
ஸ்டேப்: 3
நல்ல பிசைந்துகொண்டு ஒரு பாத்திரத்தில் மேல் ஆயில் அல்லது நெய் ஊற்றி ஊறவிடவும்.
ஸ்டேப்: 4
இப்போது கடலைப்பருப்பு வெந்து இருக்கும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அது பாகு பதத்தில் வந்துவிடும்.
ஸ்டேப்: 5
பாகில் மண் இருக்கும் ஆக அதனை வடிகட்டி கடாயில் ஊற்றிக்கொள்ளவும். அதன் பின் அதில் கடலை பருப்பை சேர்க்கவும், அதனுடன் ஏலக்காய் தூள், உப்பு ஒரு சிட்டிகை, 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து அனைத்தையும் கொதிக்கவிடவும்.
ஸ்டேப்: 6
ஓரளவு கொதிப்பு தன்மை வந்தவுடன் பெரிய குழி கரண்டியை வைத்து மசித்துவிடவும். நன்றாக மசிந்து கெட்டியான பதத்தில் வந்துவிடும். அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 சாப்பிட சாப்பிட சுவையை தூண்டும் உருளைக்கிழங்கு மசாலா போளி..!
ஸ்டேப்: 7
அடுத்து நாம் எடுத்துவைத்துள்ள மைதாவை சப்பாத்தி போல் வட்டவடிவில் தட்டி அதில் பூரணத்தை வைத்து மைதாவை மேல் பக்கம் வைத்து சுருட்டி வட்டவடிவில் வைத்துக்கொள்ளவும். இப்போது சுழியன் போல் வந்துவிடும்.
ஸ்டேப்: 8
இப்போது உருண்டையின் மேல் புறம் உங்களின் கைகளை வைத்து அழுத்தவும். மெதுவாக செய்ய வேண்டும். இப்படி செய்வதால் அனைத்து பக்கமும் சராசரியாக வந்துவிடும்.
ஸ்டேப்: 9
இப்போது தோசை கல்லை வைத்து கல் சூடானதும், அதில் ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும். அவ்வளவு தான் போளி ரெடி.
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி..! |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal |