ஸ்கூல் போகும் பிள்ளைகளுக்கு பருப்பு பொடி சாதத்தை செய்துகொடுங்கள்..!

paruppu podi recipe for rice in tamil

Paruppu Sadam Podi in Tamil

வீட்டில் கண்டிப்பாக மதியம் உணவுக்கு சாப்பாடு செய்வது வழக்கம், ஆனால் எப்போதும் ஒரே மாதிரியான புளிசாதம், தயிர் சாதம், லெமன் சாதம் என எப்போதும் ஒரே மாதிரியே சாப்பிட்டு போர் அடிக்கும். அது தான் காலையில் செய்வதற்கு ஈசியாக இருக்கும் என்று நினைப்பீர்கள்.

அதுவும் சரி தான், ஆனால் தினமும் ஈசியாக உணவு செய்வது மிகவும் சுலபம், ஆகவே இன்று உங்களுக்கு ஈசியாக பருப்பு பொடி சாதம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!

தேவையான பொருட்கள்: 

 • துவரம்பருப்பு – 100 கிராம்
 • பாசிப்பருப்பு – 100 கிராம்
 • உடைத்த கடலை – 100 கிராம்
 • பூண்டு – 100 கிராம்
 • சீரகம் – 1.1/2 டேபிள் ஸ்பூன்
 • காய்ந்த மிளகாய் – 10 
 • குண்டு மிளகாய் – 10
 • கறிவேப்பிலை – 3 கொத்து
 • பெருங்காயம் – 30 கிராம்
 • வெல்லம் – 25 கிராம்
 • உப்பு தேவையான அளவு

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl

Paruppu Sadam Podi in Tamil:

ஸ்டேப்: 1

முதலில் கடாயை எடுத்து அதில் முதலில் நாம் எடுத்து வைத்த துவரம் பருப்பை போட்டு வறுக்கவும். அந்த பருப்பை கருகாமல் வறுத்த பிறகு எடுத்து வைத்திடவும்

ஸ்டேப்: 2

பின்பு அதே அடுப்பில் பாசிப்பருப்பு போட்டு கருகவிடாமல் வறுத்துக்கொள்ளவும். அதனையும் துவரம் பருப்பில் சேர்க்கவும்.

ஸ்டேப்: 3

பிறகு அதே கடாயில் உடைத்த கடலை சேர்த்து அதனையும் வறுத்து பருப்புகளுடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப்: 4

அதே கடாயில் பூண்டு சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும். ஓரளவு வறுத்து அதையும் பருப்புகளுடன் சேர்த்து வைக்கவும்.

ஸ்டேப்: 5

பருப்பு பொடிக்கு முக்கியமாக ஒன்று இப்போது சேர்க்கப்படும் பொருள் தான். அது காய்ந்த மிளகாய் 10, குண்டு மிளகாய் 10 சேர்த்து மீடியம் தீயில் வைத்து கருக்கவிடாமல் வறுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 6

அதன் பின் உருவி வைத்த கறிவேப்பிலையை எடுத்து வறுத்து அதையும் வறுத்த பொருட்களுடன் வைத்துக்கொள்ளவும்.

ட்ரை பண்ணுங்க 👉👉 கோவில் ஸ்டைலில் சாம்பார் சாதம் செய்வது எப்படி.?

ஸ்டேப்: 7

இப்போது கடாயில் 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றிகொள்ளளவும். அதில் பெருங்காயம் சேர்த்து வறுக்கவும். இதை மட்டும் எண்ணெய்யில் வறுத்தால் அதனுடைய சுவை தனி தான்.

ஸ்டேப்: 8

அவ்வளவு தான் வருக்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வறுத்து விட்டோம்.

இப்போது வறுத்த பொருட்களுடன் கல் உப்பு, கடைசியாக கொஞ்சம் வெல்லம், அதாவது 25 கிராம் சேர்த்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 9

பிறகு அதில் 4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கொள்ளவும். அந்த நெயில் 1 டீஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், அதன் கூடவே 4 மிளகாய் கடைசியாக 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து ஒரு முறை கலந்துவிடவும்.

அதன் பின் அதில் அரைத்து வைத்த பருப்பு பொடியை போட்டு உடன் வடித்து வைத்த சாதத்தை சேர்த்து காலத்து விடவும், அடுப்பு தீ மிகவும் குறைவாக இருக்க வேண்டும்.  கலந்த பின்பு ஒரு அப்பளம் வைத்து சாப்பிடலாம் சுவை சும்மா அள்ளும்.

ட்ரை பண்ணுங்க 👉👉 கோவிலில் செய்வது போல் புளிசாதம் எப்படி செய்வது..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்