Paruthi Paal Recipe in Tamil
பொதுவாக நாம் அனைவருக்குமே மிக மிக முக்கியமானது என்றால் அது உணவு தான். ஏனென்றால் நாம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு நமக்கு தேவைப்படுவது உணவு தான். ஒரு சிலர் உணவினை மிக மிக விரும்பி சாப்பிடுவார்கள். அதாவது பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை என்றால் அது மதுரை ஸ்டைல் உணவுமுறை தான். அதனால் தான் இன்றைய பதிவில் மதுரை ஸ்பெஷல் பருத்தி பால் எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து மதுரை ஸ்பெஷல் பருத்தி பாலினை எப்படி செய்வது என்பதை அறிந்து கொண்டு அதனை செய்து சுவைத்து மகிழுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Madurai Famous Paruthi Paal Recipe in Tamil:
பொதுவாக மதுரை என்றதும் முதலில் நமக்கு நினைவிற்கு வருவது மல்லிகை பூ, மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அங்குள்ள பலவகையான உணவுகள். அப்படி மதுரையில் உள்ள பலவகையான உணவுகளில் மிகவும் பிரபலமான உணவுகள் என்று சில உள்ளது.
அதில் ஒன்று தான் பருத்தி பால் இதனுடைய சுவையை அடிச்சிக்க வேறு எதுவும் இல்லை. இப்படிப்பட்ட பருத்தி பாலினை மதுரை ஸ்டைலில் எவ்வாறு செய்வது என்று இங்கு பார்க்கலாம் வாங்க.
முதலில் இந்த பருத்தி பால் செய்வதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- பருத்தி விதைகள் – 100 கிராம்
- பச்சரிசி – 50 கிராம்
- வெல்லம் – 400 கிராம்
- தேங்காய் துருவல் – 1 கப்
- சுக்கு – 1
- மிளகு – 6
- ஏலக்காய் – 4
- திப்பிலி – 4
- அஸ்வகந்தா – 1
- அதிமதுரம் – 1
- சித்தரத்தை – 1
- தண்ணீர் – தேவையான அளவு
ஆந்திர ஸ்பெஷல் கோங்குரா பச்சடியை இப்படி ஒரு முறை செய்து சுவைத்து பாருங்கள்
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 100 கிராம் பருத்தி விதையினை 8 மணிநேரம் நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு அதிலிருந்து பாலினை மட்டும் நன்கு வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 50 கிராம் பச்சரிசியை 1 மணிநேரம் நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
இதனை நாம் வடிகட்டி வைத்துள்ள பருத்தி பாலுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
இப்பொழுது ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்து வைத்துள்ள 1 சுக்கு, 6 மிளகு, 4 ஏலக்காய், 4 திப்பிலி, 1 அஸ்வகந்தா, 1 அதிமதுரம் மற்றும் 1 சித்தரத்தை ஆகியவற்றை சேர்த்து நன்கு மசாலா போல் பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
சமைத்து கொண்டிருக்கும் பொழுதே சுவைக்க தூண்டும் திண்டுக்கல் ஸ்பெஷல் காளான் பிரியாணி செய்வது எப்படி
ஸ்டேப் – 4
அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 1 தேங்காய் துருவலில் இருந்து 1/2 கப் தேங்காய் துருவலை மட்டும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதில் உள்ள பாலினை மட்டும் வடிக்கட்டி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
இப்பொழுது அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் நாம் முன்னரே தயாரித்து வைத்துள்ள பருத்தி பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். அது நன்கு கொதித்த உடன் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலினையும் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப் – 6
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 400 கிராம் வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். வெள்ளம் நன்கு கரைந்தவுடன் அதில் நாம் முன்னேரே அரைத்து வைத்திருந்த மசாலா பொடியில் இருந்து 2 டேபிள் ஸ்பூனை மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இறுதியாக அதில் மீதமுள்ள தேங்காய் துருவலை சேர்த்து அனைவருக்கும் பரிமாறுங்கள்.
வீடே மணக்கும் கேரளா ஸ்டைல் எரிசேரியை இப்படி ஒரு முறை செய்து சுவைத்து பாருங்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |