Pasta Recipes in Tamil
நீங்கள் வீட்டில் எத்தனை வகையான பாயாசம் செய்து கொடுத்து இருப்பீர்கள். பால் பாயாசம், அவல் பாயாசம், சேமியா பாயாசம், பருப்பு பாயாசம், கேரட் பாயாசம் மற்றும் பயிறு பாயாசம் இதுபோன்ற நிறைய வகையான பாயசத்தை மாற்றி மாற்றி செய்து கொடுத்து இருப்பீர்கள். ஒரு கட்டத்திற்கு மேல் ஒரே மாதிரியான பாயசத்தை செய்து உங்களுக்கு அலுத்துபோகிருக்கும். ஆனால் இன்றைய பதிவில் சொல்லப்பட்டுள்ள பாயாசமானது கொஞ்சம் புதுசாக இருக்கும். அப்படி என்ன பாயாசம் என்று நினைக்கிறீர்களா. அந்த பாயாசம் வேறு ஒன்றும் இல்லை பாஸ்தா பாயாசம். சரி வாருங்கள் பாஸ்தா பாயாசம் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொண்டு வீட்டில் அனைவருக்கும் செய்து கொடுத்து அசத்தலாம்.
இதையும் படியுங்கள்⇒ முறையான கல்யாண வீட்டு பால் பாயாசம்
பாஸ்தா பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:
- பாஸ்தா- 100 கிராம்
- சர்க்கரை- 1/2 கப்
- பால்- 1 கப்
- நெய்- 2 ஸ்பூன்
- முந்திரி- சிறிதளவு
- திராட்சை- சிறிதளவு
- ஏலக்காய் பவுடர்- 1/2 ஸ்பூன்
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: 👉 https://bit.ly/3Bfc0Gl
பாஸ்தா பாயாசம் செய்வது எப்படி..?
ஸ்டேப்- 1
முதலில் அடுப்பை பற்ற அதில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 கப் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சி தனியாக வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து அதில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை பொன் நிறமாக வறுத்து தனியாக வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அடுத்து முந்திரி வறுத்த அதே பாத்திரத்தில் 100 கிராம் பாஸ்தாவை போட்டு சிறிது நேரம் வறுத்து கொண்டு அதனுடன் 2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் பாஸ்தாவை வேக விடுங்கள்.
ஸ்டேப்- 3
15 நிமிடம் கழித்த பிறகு பாஸ்தாவை திறந்து பாருங்கள். பாஸ்தா வெந்தவுடன் ஒரு முறை பாஸ்தாவை கிண்டி விட்டு அதனுடன் காய்ச்சி வைத்துள்ள பாலை ஊற்றி நன்றாக சிறிது நேரம் கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
சிறிது நேரம் கழித்து பிறகு அடுப்பில் இருக்கும் பாஸ்தாவுடன் 1/2 கப் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் பாயசத்தை கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப்- 5
5 நிமிடம் கழித்த பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை மற்றும் 1/2 ஸ்பூன் ஏலக்காய் பவுடர் சேர்த்து ஒரு 5 நிமிடம் அடுப்பில் வைத்து அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு பாயாசத்தை இறக்கி விடுங்கள். இப்போது சுவையான பாஸ்தா பாயாசம் தயாராகிவிட்டது.
இப்படி ஒரு முறை பாஸ்தா பாயாசம் செய்து சாப்பிட்டு பாருங்கள் சுவை நாக்கில் இருந்து கொண்டே இருக்கும்.
இதையும் படியுங்கள்⇒ வித்தியாசமான கற்றாழை பருப்பு பாயசம் செய்யும் முறை
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |