Pattani Cutlet Recipe in Tamil
பொதுநலம்.காம் பதிவின் அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் அனைவருக்கும் பிடித்த சுவையான பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். மாலை நேரத்தில் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் சுவையான பட்டாணி உருளைக்கிழங்கு கட்லெட் இப்படி செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய இந்த கட்லெட் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
மிகவும் ருசியான அவல் உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி..? |
பட்டாணி உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி..?
கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு – 6
- பச்சை பட்டாணி – 1 கப்
- பெரிய வெங்காயம் – 2
- மிளகாய் தூள் –1 ஸ்பூன்
- கரமசாலா – 1/2 ஸ்பூன்
- சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
- கறிவேப்பில்லை – 1 கொத்து
- சோளமாவு – 1/4 கப்
- கொத்தமல்லி – சிறிதளவு
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
பட்டாணி உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை:
செய்முறை -1
முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து தோல் நீக்கிய உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணியை வைத்து 20 நிமிடம் வரை வேகவைக்க வேண்டும்.
செய்முறை -2
பின் வேகவைத்த பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை நன்றாக மசித்து கொள்ள வேண்டும்.
செய்முறை -3
பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், கரமசாலா, சீரகத்தூள், கறிவேப்பில்லை, கொத்தமல்லி இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
செய்முறை -4
பின் அதை கட்லெட் போல உருட்டி கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் சமமான அளவில் உருட்டி கொள்ள வேண்டும்.
செய்முறை -5
பின் ஓரு கடாயில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் நாம் உருட்டி வைத்துள்ள கட்லெட் -யை சோளமாவில் நனைத்து எண்ணெய்யில் போட வேண்டும்.
கட்லெட் பொன்னிறமாக வரும் வரை நன்றாக பொறிக்க வேண்டும்.
அவ்வளவு தான் நண்பர்களே..! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய சுவையான பட்டாணி உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி..!
உடலுக்கு ஆரோக்கியமான பீட்ரூட் கட்லெட் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |