வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரே நிமிடத்தில் சுவையான பீட்சா ரெசிபி..! Pizza Recipe In Tamil..!

Updated On: August 10, 2023 12:56 PM
Follow Us:
Pizza Recipe Easy
---Advertisement---
Advertisement

சுவையான பீட்சா எப்படி செய்வது..! Pizza Recipe Homemade..!

Pizza Recipe Easy: ஹலோ ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் மாலை நேரத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான பீட்சா எப்படி செய்யலாம்னு இந்த பதிவில் பார்க்கலாம். அனைவரும் இந்த பீட்சா கடைகளில் மட்டும்தான் வாங்கி சாப்பிடலாம் என்று பலரும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த சுவையான பீட்சாவை வீட்டிலே சுலபமான முறையில் செய்யலாம். சரி வாங்க இப்போது வீட்டில் இருந்தே பீட்சா எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்..!

newசுவையான மினி பிட்சா செய்வது எப்படி !!!

பீட்சா செய்ய – தேவையான பொருட்கள்:

  1. மைதா மாவு – 4 டேபிள் ஸ்பூன் 
  2. பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன் 
  3. பேக்கிங் சோடா – சிறிதளவு 
  4. உப்பு – 1/4 டீஸ்பூன் 
  5. காய்ச்சிய பால் – 3 டேபிள் ஸ்பூன் 
  6. ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன் 
  7. பீட்சா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் 
  8. ஆலீவ்ஸ் ரெட் சில்லி – தேவையான அளவு 
  9. துருவிய சீஸ் – சிறிதளவு 
  10. ஆரிகேனோ பவுடர் – சிறிதளவு 

பீட்சா செய்வது எப்படி செய்முறை விளக்கம் 1:

முதலில் மைக்ரோவேவ் அவனில் வைக்கக்கூடிய பீங்கான் கப்பில் 4 டேபிள் ஸ்பூன் அளவிற்கு மைதா மாவு எடுத்துக்கொள்ளவும். மைதா மாவு சேர்த்த பிறகு பேக்கிங் பவுடர் 1/4 டீஸ்பூன் அளவு சேர்க்கவும்.

பீட்சா எப்படி செய்வது செய்முறை விளக்கம் 2:

1 பேக்கிங் சோடா சேர்த்த பிறகு உப்பு 1/4 டீஸ்பூன் அளவிற்கு சேர்த்துக்கொள்ளவும்.

பீட்சா எப்படி செய்றது செய்முறை விளக்கம் 3:

இப்போது எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். அடுத்து மிக்ஸ் செய்த பிறகு காய்ச்சி ஆறவைத்த பாலை 3 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்து மிக்ஸ் செய்துக்கொள்ளவும். இதனுடன் ஆலிவ் ஆயில் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

newபிரஷர் குக்கர் வேண்டாம், மைக்ரோ ஓவன் வேண்டாம் கேக் செய்யலாம் வாங்க..!

சுவையான பீட்சா செய்ய செய்முறை விளக்கம் 4:

மாவினை நன்றாக மிக்ஸ் செய்த பிறகு அதன் மேல் பீட்சா சாஸை 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து மாவின்மேல் தடவிக்கொள்ள வேண்டும். அடுத்ததாக இதை அலங்கரிக்க ஆலீவ்ஸ் ரெட் சில்லி அப்படி இல்லையென்றால் வீட்டில் இருக்கக்கூடிய காய்கறிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பீட்சா செய்ய செய்முறை விளக்கம் 5:

அடுத்து பீட்சாவில் மொசரெல்லா சீஸ் அல்லது சாதாரண சீஸை துருவி கப்பில் சுற்றிலும் சேர்த்துக்கொள்ளவும். சீஸை சேர்த்தபிறகு ஆரிகேனோ பவுடர் சிறிதளவு சேர்க்கவும்.

ஒரே நிமிடத்தில் சுவையான பீட்சா செய்முறை விளக்கம் 6:

இப்போது இந்த பீங்கான் கப்பை மைக்ரோவேவ் அவனில் 1 நிமிடம் வைக்க வேண்டும். 1 நிமிடம் கழித்து பீட்சாவானது பொங்கிய நிலையில் வந்து இருக்கும். இப்போது பீட்சா நன்றாக வெந்து இருக்கும். அவ்ளோதாங்க இந்த சுவையான பீட்சா ரெடி. கண்டிப்பா எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க..!

newஈஸியா பப்ஸ் செய்யலாம் வாங்க !!!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now