வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பிளம் கேக் செய்வது எப்படி? | Plum Cake Recipe in Tamil..!

Updated On: December 24, 2024 7:09 PM
Follow Us:
Plum cake recipe in tamil
---Advertisement---
Advertisement

பிளம் கேக் செய்வது எப்படி? | Plum Cake Recipe in Tamil..!

Plum Cake Recipe in tamil:- கிறிஸ்துமஸ் என்றாலே அனைவரது வீட்டிலும், கேக் செய்வார்கள் அந்த வகையில் இந்த பகுதியில் ப்ளம் கேக் செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த ப்ளம் கேக்கினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.சரி வாங்க சட்டுனு ப்ளம் கேக் செய்வது எப்படி? (Plum cake recipe in tamil) என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.

Plum cake recipe in tamil
Plum cake recipe in tamil

Plum Cake Ingredients in Tamil | ஒரு கிலோ ப்ளம் கேக் செய்ய தேவையான பொருட்கள்:-

  1. மைதா – 1/4 கப்
  2. பொடித்த சர்க்கரை – 250 கிராம்
  3. முட்டை – 4
  4. பேக்கிங் பவுடர் – 2 ஸ்பூன்
  5. வெண்ணெய் – 250 கிராம்
  6. Tutti frutti – ஒரு கப்
  7. caramel என்று சொல்லக்கூடிய சர்க்கரை பாகு – 250 கிராம்
  8. Mixed dried fruit – தேவையான அளவு 
  9. ஜாதிக்காய், சீரகம், ஏலக்காய், பட்டை, கிராம்பு – சம அளவு அதாவது அனைத்து பொருட்களிலும் 5 கிராம் எடுத்து கொள்ளவும்
  10. வெண்ணிலா எசன்ஸ் – இரண்டு ஸ்பூன்
  11. முந்திரி – தேவையான அளவு
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சுகர் குக்கீஸ் செய்யும் முறை (Christmas Special Sweets)..!

பிளம் கேக் செய்முறை? Plum Cake Recipe in Tamil..!

ஸ்டேப்: 1

முதலில் நாம் மசாலா பவுடரை தயார் செய்து வைத்து கொள்வோம் ஜாதிக்காய் 5 கிராம், ஏலக்காய் 5 கிராம், பட்டை 5 கிராம், கிராம்பு 5 கிராம், சீரகம் 5 கிராம் ஆகியவற்றை சம அளவு எடுத்து மிக்சியில் நன்றாக பவுடர் போல், பொடி செய்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

பின் ஒரு பாத்திரத்தில் 250 கிராம் வெண்ணெயை எடுத்து கொண்டு அவற்றை Hand Beater பயன்படுத்தி நன்றாக 5 நிமிடங்கள் அடித்து கொள்ளவும்.

பின் அவற்றில் பொடி செய்து வைத்துள்ள 250 கிராம் சக்கரையை சேர்த்து திரும்பவும் Hand Beater-ஆள்  நன்கு அடித்து கொள்ளவும்.

பிறகு நான்கு முட்டைகளை இந்த மாவுடன் உடைத்து ஊற்றி திரும்பவும் Hand Beater பயன்படுத்தி நன்றாக அடித்து கலந்து விட வேண்டும்.

Christmas Cookies- Microwave Oven இல்லாமல் சுலபமாக செய்யலாம்..!

ஸ்டேப்: 3

Plum cake recipe in tamil / christmas special cake:- முட்டை, மாவுடன் நன்கு மிக்ஸ் ஆனதும் அதனுடன் இரண்டு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விட வேண்டும்.

பிறகு 250 கிராம் மைதா மாவு / இரண்டு ஸ்பூன் பேக்கிங் பவுடர் இரண்டையும் ஒன்றாக கலந்து நன்றாக சலித்து இந்த கலவையில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின் பொடி செய்து வைத்துள்ள மசாலா பவுடரை இவற்றில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

இறுதியாக இந்த கலவையுடன் தேவையான அளவு Mixed dried fruit, ஒரு கப் Tutti frutti சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

ப்ளம் கேக் செய்வது எப்படி? ஸ்டேப்: 4

இவை அனைத்தையும் கலந்த பின் ஒரு கேக் டின்னில், ஒரு பேக்கிங் பேப்பரை விரித்து அவற்றில் வெண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை இவற்றில் சேர்க்க வேண்டும். பின் மாவின் மேல் பகுதியில் உடைத்த முந்திரியை தூவி இவற்றை 140 degree celsius-யில் அவனில் வைத்து ஒரு 1 மணி நேரம் வேகவைத்து எடுக்க வேண்டும்.

இப்பொழுது சுவையான ப்ளம் கேக் தயார் இவற்றை கேக் டின்னில் இருந்து எடுத்து பிட்ஜியில் சிறிது நேரம் கூல் செய்ய வேண்டும்.

அவ்வளவு தாங்க சுவையான ப்ளம் கேக் தயார் இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து அசத்துங்கள்.

குறிப்பு:

Mixed dried fruit-யினை மாவில் சேர்ப்பதற்கு முன் சிறிது நேரம் caramel என்று சொல்லக்கூடிய சர்க்கரை பாகில் ஊறவைத்த பின்புதான் கேக் மாவில் Mixed dried fruit-னை சேர்க்க வேண்டும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Iyer Veetu Pulao Recipe in Tamil

ஐயர் வீட்டு புலாவ் வீடே மணக்கும் அளவிற்கு செய்யலாம் வாங்க..

idli dosa side dish recipe in tamil

இட்லி, தோசைக்கு பல சைடிஷ் ட்ரை பண்ணிருப்பீர்கள்.! ஆனால் இந்த மாதிரி ஒரு சைடிஷ் யாரும் ட்ரை பண்ணிருக்கமாட்டீங்க ..!

iyer veetu idli podi

ஐயர் வீட்டு சுவையான இட்லி பொடி செய்வது எப்படி தெரியுமா..?

Karuveppilai Podi Recipe in Tamil

கறிவேப்பிலை பொடி செய்வது எப்படி | Karuveppilai Podi Recipe in Tamil

diwali rrecipes

5 நிமிடத்தில் தீபாவளி பலகாரம் செய்வது எப்படி? Diwali Sweets Recipes in Tamil

தீபாவளி ஸ்பெஷல் சுவையான காஜூ பிஸ்தா ரோல் செய்வது எப்படி தெரியுமா?

potato payasam recipe in tamil

விநாயகர் சதுர்த்திக்கு இப்படி ஒரு பாயசம் செய்து விடுங்கள்

வல்லாரை கீரை சமையல் ரெசிப்பீஸ்..! Vallarai Keerai Recipes..!

Green Peas And Potato Kurma in Tamil

கல்யாண வீட்டு சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா செய்வது எப்படி..?