குழந்தைகளுக்கு இந்த மாதிரி பூண்டு சட்னி செய்து கொடுங்கள்

poondu chutney recipe in tamil

பூண்டு சட்னி செய்வது எப்படி.?

குழந்தைகளுக்கு உகந்த மாதிரி பூண்டு சட்னி இப்படி செய்து கொடுத்தால் வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள். பூண்டு சாப்பிட்டால் உடலிற்கு பல நன்மைகளை தருகிறது. ஆனால் பூண்டை உணவில் சேர்த்தால் சாப்பிட மாட்டார்கள். அதனால் இந்த சட்னி செய்து கொடுத்தால் வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல் சில நண்பர்கள் காரம் அதிகமாக சாப்பிட மாட்டார்கள். அதிலும்  பூண்டு சட்னி சாப்பிடணும் என்று ஆசை படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த சட்னி செய்து கொடுங்கள் வாங்க எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள்⇒ கிராமத்து ஸ்டைலில் பூண்டு குழம்பு வைப்பது எப்படி?

பூண்டு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

  • காய்ந்தமிளகாய் -5
  • தக்காளி -1
  • பூண்டு-10 பல்
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு -தேவையான அளவு
  • கடுகு- தாளிப்புக்கு தேவையான அளவு
  • கறிவேப்பிலை- தேவையான அளவு

பூண்டு சட்னி செய்முறை:

பூண்டு சட்னி செய்வது எப்படி

ஸ்டேப்:1

முதலில் தக்காளி 1 எடுத்து நறுக்கி கொள்ளவும். 5 காய்ந்த மிளகாய் எடுத்து கொள்ளவும். 10 பல் பூண்டு எடுத்து கொள்ளவும்.

 பூண்டு சட்னி செய்வது எப்படி

முதலில் அடுப்பை பத்த  வைத்து கொள்ளுங்கள். அதில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்  ஊற்றவும். பின் காய்ந்த மிளகாய் 5 சேர்க்கவும். மிளகாய் பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

ஸ்டேப்:2

பொன்னிறம் வந்த பிறகு மிளகாயை எண்ணெய் இல்லாமல் எடுத்து  கொள்ளவும். பின் நறுக்கி வைத்த தக்காளியை சேர்க்கவும். அதே பாத்திரத்தில் தக்காளி சுருங்கிய பதம் வரும் வரை வதக்கவும்.

ஸ்டேப்:3

பின் வதக்கி வைத்த மிளகாய் மற்றும் தக்காளியை அரைக்கவும். லேசாக அரைபட்டதும் 10 பல் பூண்டை சேர்த்து அரைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.

ஸ்டேப்:4

அரைத்து வைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். பின் அடுப்பை பற்றவைத்து அதில் கடாயை வைக்கவும். அதில் தாளிப்புக்கு தேவையான நல்லெண்ணெய் ஊற்றவும். அதில் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்த பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் சட்னியை சேர்த்தால் அவ்ளோ தாங்க குழந்தைகளும் சாப்பிட கூடிய பூண்டு சட்னி ரெடி..!

 

சுவையான பீர்க்கங்காய் சட்னி.! இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அப்புறம் விடவே மாட்டீர்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்