ஒரு முறை பூண்டு கறிவேப்பிலை குழம்பு சுவையாக இப்படி ட்ரை பண்ணுங்கள்..!

Advertisement

பூண்டு கருவேப்பிலை குழம்பு செய்வது எப்படி?

Poondu Karuveppilai Kulambu  – பொதுவாக மழைக்காலங்கள் நாவிற்கு சுவையாக பூண்டு குழம்பு செய்து சாப்பிட பலர் விரும்புவார்கள். இன்று நாம் வித்தியாசமான முறையில் வீட்டிலேயே மிகவும் சுவையாக பூண்டு மற்றும் கருவேப்பிலையை பயன்படுத்தி ஒரு அருமையான புளிக்குழம்பு செய்வதை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த குழம்பை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து கொடுத்தீர்கள் என்றால், உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். கூடவே ஒரு தட்டு கூடுதலாகவே சாதம் சாப்பிட்டுவிடுவார்கள். சரி வாங்க பூண்டு கருவேப்பிலை குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. சின்ன வெங்காயம் – ஒரு கையளவு (தோல் உரித்தாள் மட்டும் போதும் சிறிதாக நறுக்கிட வேண்டும்.
  2. பூண்டு – ஒரு கையளவி
  3. தக்காளி – 5
  4. வெந்தயம் – 1/2 ஸ்பூன்
  5. கருவேப்பிலை – இரண்டு கைப்பிடி அளவு
  6. நல்லெண்ணெய் – தேவையான அளவு
  7. கடுகு – ஒரு ஸ்பூன்
  8. சீரகம் – 1/2 ஸ்பூன்
  9. மிளகு – 1/2 ஸ்பூன்
  10. காய்ந்த குண்டு மிளகாய் – 3
  11. பெருங்காய தூள் – ஒரு ஸ்பூன்
  12. குழம்பு மிளகாய் தூள் – 3 ஸ்பூன்
  13. புளி – நெல்லிக்காய் அளவு (ஊறவைத்து கொள்ளுங்கள்)
  14. வெல்லம் – சிறிய துண்டு
  15. உப்பு – தேவையான அளவு

பூண்டு கருவேப்பிலை குழம்பு செய்முறை:

ஸ்டேப்: 1

முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அவற்றில் இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலை செய்து கருகிவிடாமல் நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதனை நன்கு வைக்கவும்.

ஸ்டேப்: 2

பின் மிக்ஸி ஜாரில் செய்து தண்ணீர் ஊற்றாமல் kora கொரப்பாக அரைத்து கொள்ளுங்கள். பின் அதனை ஒரு பவுலில் மாற்றிக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

பிறகு அடுப்பில் அதே வாணலியை வைத்து தேவையான அளவு நல்லெண்ணெய்யை ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.

ஸ்டேப்: 4

கடுகு நன்கு பொரிந்துவந்ததும் 1/2 ஸ்பூன் வெந்தயம்,  1/2 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் மிளகு, காய்ந்த மிளகாய் 3 மற்றும் பூண்டு ஒரு கையளவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

ஸ்டேப்: 5

பூண்டு ஓரளவு வதங்கி வந்ததும் கொஞ்சம் கருவேப்பிலை, சின்ன வேங்கையாம் ஆகியவற்றை செய்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். இந்த சமயத்தில் அடுப்பு தீயை பெரிதாக வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 6

வெங்காயம் நன்கு வதங்கியதும் ஒரு ஸ்பூன் பெருங்காய தூளை சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள்.

ஸ்டேப்: 7

பிறகு அடுப்பு அனலை கொஞ்சமாக வைத்து கொண்டு நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை தூளை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

ஸ்டேப்: 8

பின்பு 5 தக்காளி பழத்தை மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்து இந்த குழம்பில் ஊற்றுங்கள்.

ஸ்டேப்: 9

பிறகு மூன்று ஸ்பூன் குழம்பு மிகளக்கை தூள் சேர்த்து நன்றாக கிளறுங்கள். குழம்பு தளதளவென வெறும் போது மூன்று ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு குளம்ப்பை நன்றாக கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப்: 10

பிறகு உறவைத்துள்ள புளி கரைசலை இவற்றில் சேர்க்கவும், பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். அதேபோல் தேவையான அளவு உப்பு செய்து நன்றாக கொதிக்கவைக்கவும்.

ஸ்டேப்: 11

இந்த குழம்பு கெட்டியாக இருந்தால் தான் சுவையாக இருக்கும் ஆக அதற்கு ஏற்றது போல் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 12

குழம்பு 5 முதல் 10 நிமிடங்கள் நன்கு கொதித்ததும். 10 நிமிடம் கழித்த பிறகு சிறிது வெல்லம் சேர்த்து மீண்டும் 2 நிமிடங்கள் குழம்பை கொதிக்க வையுங்கள். பிறகு அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான பூண்டு கருவேப்பிலை குழம்பு தயார் ஒரு முறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 ருசியான செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி.?

இந்த குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என்று அனைத்து உணவுகளுக்கும் மிகவும் சுவையாக இருக்கும். பிட்ஜியில் இந்த குழம்பை 15 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம் கெட்டு போகாது.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement