3 உருளைக்கிழங்கு இருந்தா இப்பவே இந்த ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க

Advertisement

உருளைக்கிழங்கு ஸ்னாக்ஸ் ரெசிபி | Potato Dish in Tamil

Potato Dish in Tamil – அனைவருக்குமே ஸ்னாக்ஸ் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். தினமும் ஒரே மாதிரியான ஸ்னாக்ஸ் சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு உதவிடும் வகையில், இன்று நாம் வெறும் மூன்று உருளைக்கிழங்கை வைத்து அருமையான ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபி செய்முறை விளக்கத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க இந்த மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு ஸ்னாக்ஸ் ரெசிபி எப்படி செய்யலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  • உருளைக்கிழங்கு – மூன்று
  • கொத்தமல்லி தழை – ஒரு கையளவு
  • சீஸ் – 100 கிராம்
  • பூண்டு பல் – 5
  • கான்பிளவர் மாவு – 5 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • அரிசி மாவு – ஒரு ஸ்பூன்
  • சமையல் எண்ணெய் – 1/2 லிட்டர்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேக்குறாங்களா? பத்தே நிமிடத்தில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் குழிப்பணியாரம் ரெடி !!!

உருளைக்கிழங்கு ஸ்னாக்ஸ் ரெசிபி செய்முறை – Potato Recipes in Tamil for Snacks:

ஸ்டேப்: 1

முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பின் அவற்றில் இருக்கும் தோல் பகுதியை நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை அரைக்கவும்.

ஸ்டேப்: 3

அரைத்த உருளைக்கிழங்கை ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை இரண்டையும் சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளுங்கள்.

ஸ்டேப்: 4

பின் அதனுடன் இடித்த சீஸ், பூண்டு, மிளகாய் தூள், அரிசி மாவு மற்றும் கான்பிளவர் மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும்.

ஸ்டேப்: 5

இவ்வாறு பிசைந்த மாவை இரண்டு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 6

பிறகு சப்பாத்தி தேக்கும் பலகை மற்றும் கட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் சிறிதளவு அரிசி மாவு தூவி தேய்த்துவிடுங்கள்.

ஸ்டேப்: 7

பிறகு உருட்டிவைத்த மாவை சப்பாத்தி பலகையில் வைத்து மேல் படத்தில்  காட்டியுள்ளது போல் மொத்தமாக தேய்த்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 8

பின் நீளமாக சிறு சிறு துண்டுகளாக மேல் படத்தில் காட்டியுள்ளது போல் கட்  செய்து எடுத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு மீதமுள்ள மாவையும் தேய்த்து கட் செய்து வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 9

பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாலை நேரத்தில் டீயுடன் இந்த ஸ்னாக்ஸ் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..!

ஸ்டேப்: 10

எண்ணெய் சூடானதும் கட் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மாவை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

potato dish

ஸ்டேப்: 11

அவ்வளவு தான் உருளைக்கிழங்கு ஸ்னாக்ஸ் ரெசிபி தயார், இப்படி ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement