உருளைக்கிழங்கு இருக்கா..? அப்போ இந்த மாதிரி சுவையான ரெசிபி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..!

Potato Triangle Snacks Recipe in Tamil

Potato Triangle Snacks Recipe

இன்றைய சமையல் குறிப்பு பதிவில் உருளைக்கிழங்கு வைத்து மிகவும் அருமையான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளப் போகிறோம். வீட்டில் இருப்பவர்களுக்கும் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கும் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அப்படி நினைத்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஒரு முறை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த ஸ்நாக்ஸ் செய்து கொடுத்து பாருங்கள். தினமும் செய்த்து கொடுக்க சொல்லி அடம்பிடிப்பார்கள். வாங்க நண்பர்களே இந்த ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Potato Triangle Snacks Recipe in Tamil:

Potato Triangle Snacks Recipe

தேவையான பொருட்கள்: 

  1. உருளைக்கிழங்கு – 4
  2. மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
  3. மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
  4. சோளமாவு – 1 கப்
  5. கொத்தமல்லி – சிறிதளவு
  6. துருவிய சீஸ் – 3 டேபிள் ஸ்பூன்
  7. சேமியா – சிறிதளவு
  8. உப்பு – தேவையான அளவு
  9. எண்ணெய் – தேவையான அளவு

உருளைக்கிழங்கு எடுத்து கொள்ளவும்: 

உருளைக்கிழங்கு எடுத்து கொள்ளவும்

முதலில் உருளைக்கிழங்கை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதை நான்கு துண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். உருளைக்கிழங்கு மாவு பதத்திற்கு வரும் வரை நன்றாக வேகவைக்க வேண்டும்.

உருளைக்கிழங்கு வெந்து வந்தவுடன் அடுப்பில் இருந்து இரக்கி ஆறவிட வேண்டும். பின் அதன் தோலை நீக்கி விட்டு உருளைக்கிழங்கை மாவு போல பிசைந்து கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கு வறுவலை ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்..!

மசாலா சேர்க்கவும்:

மசாலா சேர்க்கவும்

பின் அதில் மிளகு தூள், மிளகாய் தூள், சோளமாவு, துருவிய சீஸ், நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து மாவுபோல தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து கொள்ள வேண்டும்.

முக்கோண வடிவத்தில் நறுக்கி கொள்ளவும்:

முக்கோண வடிவத்தில் நறுக்கி கொள்ளவும்

பின் நாம் பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து படத்தில் உள்ளது போல முக்கோண வடிவத்தில் நறுக்கி கொள்ள வேண்டும்.

சோளமாவு: 

பின் ஒரு கிண்ணத்தில் 1/2 கப் அளவில் சோளமாவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் தேவையான அளவு உப்பு, சிறிதளவு மிளகு தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ள வேண்டும்.

டீ கடை டேஸ்ட்டில் உருளைக்கிழங்கு போண்டா..!

சேமியா எடுத்து கொள்ளவும்:

சேமியா எடுத்து கொள்ளவும்

ஒரு தட்டில் தேவையான அளவு சேமியாவை எடுத்து கொள்ளவும். அதை தூளாக நுணுக்கி வைத்து கொள்ளவும்.

பின் நாம் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை நாம் கரைத்து வைத்துள்ள சோளமாவில் நனைத்து பின் அதில் எல்லாப் பக்கமும் சேமியா தூளை தூவி விட வேண்டும்.

அடுப்பில் கடாய் வைக்கவும்: 

அடுப்பில் கடாய் வைக்கவும்

பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் இதை போட்டு பொன்னிறமாக வரும் வரை பொறிக்க வேண்டும்.

அவ்வளவு தான் நண்பர்களே மிகவும் சுவையான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் தயார். இதை நீங்கள் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள்.

வாழைக்காய், உருளைக்கிழங்கு மட்டும் இருந்தால் போதும் மழைக்காலத்திற்கு ஏற்ற சூடான மற்றும் ருசியான ஸ்நாக்ஸ் ரெடி ..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal