பொட்டுக்கடலை வடை செய்வது எப்படி?
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் பருப்பு வடையை இந்த பருப்பை வைத்து செய்து பாருங்கள் அது எப்படி இருக்கும் என்று சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே ரொம்ப பிடிக்கும் அந்த அளவிற்கு சுவை சூப்பராக இருக்கும். பொதுவாக வடை என்றால் உளுந்துவடை, அல்லது கடலை பருப்பு வடை மட்டுமே செய்வார்கள்..! ஆனால் அந்த வடையை செய்ய வேண்டுமென்றால் 1 மணி நேரம் பருப்பை ஊறவைக்க வேண்டும் ஆனால் இந்த வடைக்கு பருப்பு ஊற வேண்டுமென்ற அவசியம் இல்லை 10 நிமிடத்தில் வடையை செய்துவிடலாம். வாங்க அது எப்படி என்று பார்ப்போம்..!
வடை செய்ய தேவையான பொருட்கள்:
- பொட்டுக்கடலை -1 கப்
- துருவிய கேரட் – 1 கப்
- மிளகு -1 ஸ்பூன்
- சோம்பு -1 ஸ்பூன்
- பூண்டு தோல் உரிக்காதது – 4 பல்
- வெங்காயம் -1
- பச்சை மிளகாய் – 1
- இஞ்சி – 1 துண்டு
- காய்ந்த மிளகாய் – 1
- கருவேப்பிலை கொத்தமல்லி – 1
- உப்பு – 1/2 டீஸ்பூன்
- எண்ணெய் – 200 கிராம்
ஸ்டேப்: 1
முதலில் வெங்காயத்தை வடைக்கு அறிவது போல் அறிந்துகொள்ளவும். அதேபோல் கருவேப்பிலை கொத்தமல்லி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி துருவிக்கொள்ளவும், காய்ந்த மிளகாயை இரண்டாக கிள்ளி தனியாக வைத்துக்கொள்ளவும். மற்ற பொருட்களை தேவையாவது போல் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 2
முதலில் கேரட்டை தோல் சிவி தனியாக எடுத்துக்கொள்ளவும், அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, மிளகு, சோம்பு சேர்த்து லேசாக கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 3
பின்பு அதில் துருவிய கேரட் பூண்டு சேர்த்து ஒரு இரண்டு தடவை அரைத்து விட்டால் போதும். இது கொரகொரப்பாக இருக்க வேண்டும்.
ஸ்டேப்: 4
இந்த அரைத்த பொருட்களை தனியாக ஒரு கிண்ணத்தில் வைக்கவும். பின்பு அதனுடன் தனியாக நறுக்கி வைத்த வெங்காயம் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், துருவிய இஞ்சி, உப்பு அனைத்தும் சேர்த்து லேசாக தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
ஸ்டேப்: 5
தண்ணீர் அதிகமானால் எண்ணெய் குடிக்கும் அதனால் அதனை தெளித்து கலந்துகொண்டால் போதுமானது ஆகும். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வடையை பொரிக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பின் மாவை கையில் வைத்து வடை போல் தட்டி எண்ணெய் காய்ந்ததும் அதில் போட்டு பொரிக்கவும்.
எண்ணெய்யை அதிகமாக சூடாக வைத்து அதில் வடை போட்டால் வடை கருகி போய்விடும் அதனால் மிதமாக இருக்கும் போது வடை போட்டால் போதும்.
மெது வடை, மசால் வடை சாப்பிட்டிருப்பீங்க.! சோளம் வடை சாப்பிட்டிருக்கீங்களா.!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |