குக்கர் பராமரிப்பு குறிப்புகள்..! Cooker Maintenance..!
Kitchen Tips: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம் -ன் குக்கர் பராமரிப்பு டிப்ஸ்களை பற்றித்தான் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். இன்றைய உலகில் பிரஷர் குக்கர் இல்லாத சமையல் அறையே இல்லை என்பதுதான் உண்மை. பிரஷர் குக்கர் வைத்துக்கொள்ளுவது மிகவும் பெரிதல்ல. அவற்றை எப்படி பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் என்று தெரிந்துக்கொள்ளுதல் மிகவும் அவசியம். பிரஷர் குக்கர் (Pressure Cooker Tips) உபயோகிப்பதால் எரிப்பொருளானதும் சிக்கனம் அடைவதோடு சமையல் வேலையும் எளிதில் முடிவடையும். இப்போது உள்ள மாடர்ன் உலகில் கிராமங்களில் கூட பிரஷர் குக்கர் தான் பயன்படுத்தி வருகின்றனர். குக்கரை சரியான முறையில் பயன்படுத்தினால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
15 சிறந்த சமையல் அறை டிப்ஸ்..! |
Pressure Cooker Tips:
Tips 1: தினமும் சமையலிற்கு பிறகு குக்கரின் லிட்டை (Cooker Lid) நன்றாக வாஷ் செய்ய வேண்டும். குக்கரின் மேல் மூடியின் அந்த ஓட்டையினுள் தண்ணீர் விட்டு வாஷ் செய்யும் போது நீரானது சுத்தமாக வர வேண்டும். ஏதேனும் உணவுகள் அடைத்திருந்தால் இதனை வைத்து நாம் கண்டறியலாம்.
Pressure Cooker Using Tips In Tamil:
Tips 2: சமைத்து முடித்த உடன் குக்கரின் கேஸ்கட் பகுதிகளில் சமைத்த உணவானது கேஸ்கட் உட்பகுதியில் தங்கியிருக்கும். அவற்றை நீரினால் சுத்தமாக வாஷ் செய்யவும். ஒவ்வொரு சமையலிற்கு பிறகும் சுத்தம் செய்த கேஸ்கட்டை ஃப்ரீஸரின் மேல் வைக்க வேண்டும்.
Pressure Cooker Tips & Tricks:
Tips 3: அடுத்ததாக குக்கர் விசிலில் சமைத்த உணவானது தங்க வாய்ப்புள்ளது. அதனை வெளியேற்ற குக்கர் விசிலின் மூடியினை அகற்றி பாத்திரம் வாஷ் செய்யும் ஸ்க்ரப்பர் கொண்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனை செக் செய்து கொள்வதற்கு விசிலின் மூடியில் 2,3 ஓட்டைகள் இருக்கும். அதன் வழியாக தண்ணீரை ஊற்றி செக் செய்யலாம்.
How To Avoid Pressure Cooker Spillage:
Tips 4: குக்கரில் எப்போதும் குழம்பு வகை சமைக்கும் போது 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொண்டால் குழம்பானது வெளியில் பொங்கி வராது.
கேஸ் சிலின்டர் எவ்வளவு அளவு உள்ளது – சுலபமாக தெரிந்துகொள்ளும் சூப்பர் TRICKS |
Pressure Cooker Tips:
Tips 5: குக்கரில் சமைக்கும் போது தண்ணீர் அளவினை சரிபார்த்த பிறகு தான் சமைக்க வேண்டும். குக்கரில் அதன் பாதி அளவிற்கு மேல் குக்கரில் தண்ணீர் வைக்க கூடாது.
Pressure Cooker Spillage:
Tips 6: எப்போதும் குக்கரில் வைத்த குழம்பு நன்றாக கொதித்த பிறகு தான் குக்கரின் மூடியினால் மூட வேண்டும்.
Pressure Cooker Tips & Tricks:
Tips 7: குக்கரில் சமைக்கும் போது மூடியுடன் சேர்த்து குக்கர் விசிலை சேர்த்து மூட கூடாது. மூடியினில் இருந்து காற்றானது வெளியில் வந்த பிறகு தான் விசிலை வைக்க வேண்டும். இதன் காரணம் இப்போது வைத்திருக்கும் உணவானது அதில் மாட்டிக் கொண்டால் பிரஷர் வெளியில் வராமல் போய்விடும். அதனால் எப்போதும் செக் செய்த பிறகு விசிலினை மூடவும்.
How To Avoid Pressure Cooker Spillage:
Tips 8: இயற்கையாகவே எப்போதும் குக்கரில் உள்ள உணவு வகைகளின் பிரஷர் வெளிவரதுதான் நல்லது. அவசரமாக வெளி வேலை உள்ளவர்கள் உடனடியாக எடுக்க நினைப்பவர்கள் குக்கரின் விசில் மூடியை பாதி அளவிற்கு எடுத்து விடுவதால் உள்ளே குழம்பானது கொதித்த நிலையிலே இருக்கும்.
இதனால் நம் கையில் அந்த குழம்பு ஆவியானது படும். இந்த முறையை தவிர்க்க குக்கரின் மேலே சிறிது தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். இந்த முறையை பின்பற்றினால் கைகளில் ஆவி அடிக்கும் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
சமையலறை குறிப்பு – பிரிட்ஜ் பராமரிப்பு ..! |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |