பத்தே நிமிடத்தில் சுவையான பூசணிக்காய் அல்வா செய்யலாம் வாங்க..! | Pumpkin Halwa in Tamil

பூசணி அல்வா செய்வது எப்படி? | Poosanikai Halwa Seivathu Eppadi

Kasi Halwa Recipe in Tamil: இனிப்பு வகை உணவு எல்லோருக்குமே பிடித்த உணவாக இருக்கும். அதில் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்பு வகையாகும். கேரட் அல்வா, வாழைப்பழ அல்வா, பிரட் அல்வா, பரங்கிக்காய் அல்வா என்று பல வகைகள் உள்ளது. பூசணிக்காயை நாம் எப்பொழுதும் குழம்பு அல்லது கூட்டாக செய்து தான் சாப்பிட்டிருப்போம் ஆனால் பூசணிக்காயில் அல்வா செய்யலாம் என்று எத்தனை பேருக்கு தெரியும், அந்த வகையில் இந்த தொகுப்பில் பூசணிக்காயில் அல்வா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

சுண்டியிழுக்கும் சுவையான அத்திப்பழ அல்வா

தேவையான பொருட்கள்:

kasi halwa in tamil

 

 1. பூசணிக்காய் – தேவையான அளவு
 2. சர்க்கரை – 250 கிராம்
 3. குங்குமப்பூ அல்லது கேசரி பவுடர் – சிறிதளவு
 4. உப்பு – 1 சிட்டிகை
 5. நெய் – 2 டேபிள் ஸ்பூன்
 6. ஏலக்காய் பொடி – 7-8 கிராம்
 7. எலுமிச்சை சாறு – அரை டேபிள் ஸ்பூன்
 8. பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை
 9. முந்திரி – 1 கப்

பூசணி அல்வா செய்முறை:

Poosanikai Halwa in Tamil

ஸ்டேப்: 1

 • Poosanikai Halwa in Tamil: முதலில் பூசணிக்காயை தோல் சீவி கொள்ளவும். பின் பூசணிக்காயை நன்றாக துருவி அதில் இருக்கும் தண்ணியை பிழிந்து விட்டு சக்கையை மட்டும் எடுத்து வைத்து கொள்ளவும்.
 • பூசணிக்காய் தண்ணியை ஒரு பௌலில் எடுத்து வைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

 • Poosanikai Halwa Recipe in Tamil: பின் ஒரு கடாயில் பூசணிக்காய் தண்ணியை ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்தவுடன் துருவிய பூசணிக்காயை சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.

ஸ்டேப்: 3

 • Kasi Halwa in Tamil: பின்னர் அதில் 250 கிராம் சர்க்கரை சேர்த்து (துருவிய பூசணிக்காய் எவ்வளவு இருக்கிறதோ அதே அளவிற்கு சர்க்கரை சேர்க்க வேண்டும்) மிக்ஸ் பண்ணவும். அதன் பிறகு அதில் சிறிதளவு குங்குமப்பூ அல்லது கேசரி பவுடர் சேர்த்து 3 – 4 நிமிடம் வேகவைக்கவும்.

ஸ்டேப்: 4

 • Pumpkin Halwa in Tamil: 4 நிமிடம் கழித்து 1 சிட்டிகை உப்பு, 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து மிக்ஸ் பண்ணவும். இதை 5-6 நிமிடம் இடைவெளி இல்லாமல் கிண்டி கொண்டே இருக்கவும். பின்னர் அதில் 7-8 கிராம் ஏலக்காய் பொடி, அரை டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

ஸ்டேப்: 5

 • Pumpkin Halwa in Tamil: பூசணிக்காய் அல்வா நன்றாக வெந்து கலர் வந்தவுடன் அதில் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்து கிளறவும். சர்க்கரை, நெய் நன்றாக சுண்டிய பின் அடுப்பை அணைத்து விடலாம்.

ஸ்டேப்: 6

 • பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி? பின்னர் அடுப்பில் இன்னொரு கடாய் வைத்து மிதமான சூட்டில் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து அதில் 1 கப் முந்திரி சேர்த்து வறுக்கவும். பின் வறுத்த முந்திரியை பூசணிக்காய் அல்வாவில் சேர்த்து மிக்ஸ் பண்ணலாம். அவ்வளவு தான் சுவையான பூசணிக்காய் அல்வா தயார்.
கோதுமை மாவில் அல்வா செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil