கருப்பட்டி ராகி சமையல் செய்முறை விளக்கம்..!
Ragi flour recipes in tamil:- பொதுவாக நாம் தினமும் மாலை நேரங்களில் டீ, காபி போன்றவற்றை குடிப்பதை பழக்கமாக வைத்திருப்போம், இனி இதற்கு பதிலாக சற்று வித்தியாசமாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் ராகி மாவை கொண்டு ஏதேனும் பானங்கள் செய்து குடிக்கலாம் வாங்க. அதாவது ராகி மாவை கொண்டு வித்தியாசமாக ராகி கூல் மற்றும் ராகி பாதாம் மில்க் ஷேக் செய்து குடிப்பதினால் பசி அடங்கி சுறுசுறுப்பு கிடைப்பதுடன், மேலும் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
சுவையான ராகி பக்கோடா செய்யலாம் வாங்க..! |
சரி வாங்க இவற்றில் ராகி மாவை வைத்து இரண்டு பானங்கள் செய்வோம்.
ராகி பாதாம் மில்க் ஷேக் (Gramiya samayal 1):
தேவையான பொருட்கள்:
- ராகி மாவு – 2-3 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 1/2 கப்
- பாதாம் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
- குளிர்ந்த பால் – 2 கப்
- சர்க்கரை – தேவையான அளவு
Ragi flour recipes in tamil: 1
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும், அவற்றில் ராகி மாவை போட்டு தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கிளறி விடவும்.
பின்பு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, குறைவான தீயில் கெட்டியாக வருமறை கிளறி விடவும்.
Ragi flour recipes in tamil: 2
ராகி மாவு கெட்டியானவுடன் அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்கவும்.
மாவு நன்றாக குளிர்ந்தவுடன், மிக்சியில் போட்டு அதனுடன் சர்க்கரை, பாதாம் பவுடர், பால் சேர்த்து சிறிது நேரம் அரைக்க வேண்டும்.
Ragi flour recipes in tamil: 3
பின்பு மிக்சியில் இருந்து அந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றினால் சுவையுள்ள மற்றும் ஆரோக்கியமான ராகி பாதாம் மில்க் ஷேக் தயார்.
ஆரோக்கியமான கருப்பட்டி ராகி கூல் (Ragi flour recipes in tamil):
ராகி கூல் செய்வதற்கான தேவையான பொருட்கள்:
- ராகி மாவு – 1/2 கப்
- கொதிக்க வைத்த பால் – 1.5 கப்
- கருப்பட்டி – தேவையான அளவு
- தண்ணீர் – 2 கப்
- பாதாம் – சிறிது (நறுக்கியது)
- ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
வயிற்று கோளாறை சரிசெய்யும் பிரண்டை குதிரைவாலி தோசை…! |
Ragi flour recipes in tamil: 1
முதலில் ராகி கூல் செய்வதற்கு கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின்பு அடுப்பில் இருந்து இறக்கி கருப்பட்டியை வடிகட்டி தனியாக வைத்துக்கொள்ளவும்.
Ragi flour recipes in tamil: 2
பிறகு மற்றொரு பாத்திரத்தில் ராகி மாவை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாதவாறு கலந்து வைத்து கொள்ளவும்.
பின்பு அந்த கலவையை அடுப்பில் வைத்து தொடர்ந்து கரண்டியை கொண்டு கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
Ragi flour recipes in tamil: 3
ராகி கலவையானது கொஞ்சம் கெட்டியானதும் அவற்றை அடுப்பில் இருந்து இறக்கி, கருப்பட்டி பாகு, ஏலக்காய் பொடி மற்றும் பாதாம் சேர்த்து கிளறினால் போதும், சுவையுள்ள மற்றும் ஆரோக்கியமான கருப்பட்டி ராகி கூல் தயார்.
வித்தியாசமான கற்றாழை பருப்பு பாயசம்..! |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |