ரவா கேக் செய்வது எப்படி? Rava Cake Recipe In Tamil..!

Rava Cake Recipes

ரவா கேக் செய்வது எப்படி? Rava Cake Recipe In Tamil..!

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம் பதிவில் எல்லாருக்கும் பிடித்த ஒரு ஈஸியான ரவா கேக் ரெசிபி பார்க்கப்போறோம். ரவையை வைத்து சாஃப்ட் ஆன கேக்(Rava Cake) செய்முறையை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம் நண்பர்களே வாங்க..!

newகிறிஸ்துமஸ் ப்ளம் கேக் செய்வது எப்படி?..! Plum cake recipe in tamil..!

ரவா கேக் செய்ய தேவையான பொருட்கள்:

 1. பால் – 1 கப் 
 2. வினிகர் அல்லது எலுமிச்சை சாறு  – தேவையான அளவு 
 3. டூட்டி ஃப்ரூட்டி – 1/4 கப் 
 4. மைதா மாவு – 1 ஸ்பூன் 
 5. ரவா – 1 1/2 கப் 
 6. ஈனோ பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் 
 7. சர்க்கரை – 1 கப் 
 8. எண்ணெய் – 1/4 கப் 
 9. வெண்ணிலா எசன்ஸ் – தேவையான அளவு 
 10. உப்பு – தேவையான அளவு 
 11. பால் பவுடர் – 1/4 கப் 

ரவா கேக் செய்முறை விளக்கம் 1:

Rava Cake In Tamil Language: முதலில் இந்த ரெசிபி செய்ய பட்டர் மில்க் தயாரிக்கவேண்டும். அதற்கு பால் 1 கப்  எடுத்துக்கொள்ளவும்.

பின் பாலுடன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். சேர்த்துவிட்டு தனியாக வைத்துக்கொள்ளவும்.

தனியாக ஒரு பவுலில் டூட்டி ஃப்ரூட்டி 1/4 கப் அளவு சேர்த்துக்கொள்ளவும்.

newவாழைப்பழ கேக் செய்யலாம் !!! How to Make Banana Cake Tamil

ரவா கேக் செய்முறை விளக்கம் 2:

Rava Cake In Tamil Language: இந்த டூட்டி ஃப்ரூட்டி உடன் மைதா மாவு 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும். நன்றாக கலந்துவைத்த பிறகு தனியாக இதையும் வைத்துகொள்ளவும்.

இப்போது மிக்ஸி ஜாரில் ரவா 1 1/2 கப் அளவு எடுத்துக்கொண்டு நன்றாக ரவையை அரைத்துக்கொள்ளவும். அடுத்து ஈனோ பவுடர் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும். அடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் சல்லடையை கொண்டு அரைத்த ரவையை சேர்த்து விடவும்.

அடுத்து சர்க்கரை 1 கப் எடுத்து நன்றாக அரைத்து ரவையுடன் சேர்க்கவேண்டும்.

ரவா கேக் செய்முறை விளக்கம் 3:

Rava Cake Recipes: எல்லாவற்றையும் நன்றாக சலித்தபின் பால் பவுடர் 1/4 கப்  அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் பவுடர் இல்லாதவர்கள் பால் கூட சேர்த்துக்கொள்ளலாம்.

இதனுடன் எண்ணெய் 1/4 கப் அளவு, தனியாக செய்துவைத்த பட்டர் மில்க்கை சேர்த்து Hand Beater -ஆல் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதை நன்றாக மூடி போட்டு மூடி 30 நிமிடம் வைக்கவேண்டும். ரவா நன்றாக உப்பி வருவதற்காக மூடிவைக்க வேண்டும்.

ரவா கேக் செய்முறை விளக்கம் 4:

Rava Cake Recipes: 30 நிமிடம் கழித்து அதனுடன் கலந்து வைத்த டூட்டி ஃப்ரூட்டியை இதனுடன் சேர்க்கவேண்டும்.

நன்றாக கலந்தபிறகு தேவையான அளவிற்கு வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளளவும்.

தனியாக வட்டவடிவில் கேக் ட்ரேயில் எண்ணெய் அல்லது பட்டர் ஷீட் வைத்துக்கொள்ளுங்கள்.

ரவா கேக் செய்முறை விளக்கம் 5:

Rava Cake In Tamil: அடுத்ததாக பட்டர் ஷீட்டில் சிறிதளவு டூட்டி ஃப்ரூட்டியை தூவிக்கொள்ளவும்.

அடுத்து அந்த பட்டர் ஷீட் மேல் கலந்துவைத்த மாவை இதன்மேல் ஊற்றவும். இதன் மேலேயும் சிறிதளவு டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக்கொள்ளலாம்.

இப்போது அடி கனமான ஒரு கடாயில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

ரவா கேக் செய்முறை விளக்கம் 6:

Rava Cake In Tamil: உப்புவை நல்லா 10 நிமிடம் ஹீட் செய்யவேண்டும். ஹீட் செய்த பிறகு ரெடி பண்ண மாவை இந்த உப்பின் மேல் மிதமான சூட்டில் வைத்து 30 அல்லது 35 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

நன்றாக 30 நிமிடம் வெந்த பிறகு கேக்கை ஆறியபின் இதை அனைவரும் சாப்பிடலாம்.

ரொம்பவே சாஃப்டான கேக்(Rava Cake Recipes )ரெடிங்க.. இதை கண்டிப்பா வீட்ல செஞ்சி பாருங்க.

நன்றி வணக்கம்…🙏🙏🙏

newகேக் செய்வது எப்படி? தெளிவான செய்முறை விளக்கம்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil