Rava Snacks Recipes in Tamil
அன்பு உள்ளம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் ரவை மட்டும் வைத்து மிகவும் சுவையான மொறு மொறுன்னு ஸ்நாக்ஸ் செய்வது எப்படி.? என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். மாலை நேரங்களில் இந்த மொறு மொறு ஸ்நாக்ஸ் -யை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள். அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ரவை சீட்டோஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
1/2 கப் ரவை போதும் மிருதுவான ரசகுல்லா செய்வது எப்படி..? |
ரவை வைத்து மொறு மொறு சீட்டோஸ் செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:
- ரவை – 1 கப்
- தண்ணீர் – 1 கப்
- மிளகாய் தூள் – சிறிதளவு
- சீரகத்தூள் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
ரவை சீட்டோஸ் செய்முறை:
செய்முறை -1
முதலில் ஒரு கடாயில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிதளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
செய்முறை -2
பிறகு தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அதில் 1 கப் அளவில் ரவையை சேர்க்க வேண்டும்.
பின் ரவையை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். ரவை நன்றாக வேகும் வரை கிண்ட வேண்டும்.
செய்முறை -3
பின் ரவையை 3 நிமிடங்கள் வரை நன்றாக ஆறவிட்டு பிசைய வேண்டும். பின் கையில் சிறிதளவு எண்ணெய் தடவி கொண்டு ரவையை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்ட வேண்டும்.
செய்முறை -4
பிறகு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் உருண்டையாக உருட்டி வைத்துள்ள ரவையை போட்டு பொறிக்க வேண்டும்.
ரவை பொன்னிறமாக சிவந்து வரும் வரை நன்றாக பொறிக்க வேண்டும்.
செய்முறை -5
பின் அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் காரத்திற்க்காக சிறிதளவு மிளகாய் தூள், சீரக தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் நண்பர்களே மிகவும் சுவையான மொறு மொறு ரவை சீட்டோஸ் ரெடி..! இந்த மாதிரி ரவை சீட்டோஸ் நீங்களும் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள்..!
சுவையான ரவை பணியாரம் செய்வது எப்படி? |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |