இந்த தீபாவளிக்கு இது மாதிரி ஸ்வீட் செஞ்சி சாப்பிட்டு பாருங்க சூப்பரா இருக்கும்..!

Advertisement

Ravai Dumpling Sweet Recipe in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு பொதுநலம்.காம் பதிவின் வணக்கங்கள்… இன்றைய சமையல் குறிப்பு பதிவில் ஒரு புதிய முறையில் ஸ்வீட் செய்வது எப்படி என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். எல்லாருமே வரபோற தீபாவளிக்கு என்ன ஸ்வீட் செய்யலாம் அப்படினு யோசிப்பீர்கள். புதியதாக என்ன ஸ்வீட் செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவின் மூலம் ரவா தம்பிங் ஸ்வீட் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!

தீபாவளிக்கு இந்த மாதிரி ஸ்வீட் செஞ்சி அசத்துங்க..!

ரவா தம்பிங் ஸ்வீட் செய்வது எப்படி..? 

தேவையான பொருட்கள்:

  1. பாசிப்பருப்பு – அரைக் கப்
  2. துருவிய தேங்காய் – 1 கப்
  3. நெய் – 1 ஸ்பூன்
  4. ரவை – 1 கப்
  5. பால் – 1 கப்
  6. சர்க்கரை (அ) வெல்லம் – முக்கால் கப்
  7. ஏலக்காய் – 4
  8. உப்பு – சிறிதளவு
  9. எண்ணெய் – தேவையான அளவு

ரவா தம்பிங் ஸ்வீட் செய்முறை: 

செய்முறை -1

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ள வேண்டும். அதில் பாசிப் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

செய்முறை -2

பின் அதே கடாயில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு 1 கப் துருவிய தேங்காயை சேர்த்து அதில் உள்ள ஈரப்பதம் போகும் வரை நன்றாக வறுக்க வேண்டும்.

செய்முறை -3

பின்னர் நாம் வறுத்து வைத்துள்ள பாசிப்பருப்பு மற்றும் தேங்காயை மிக்சியில் போட்டு அதனுடன் அரை கப் சர்க்கரை மற்றும் 4 ஏலக்காய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மாவு போல அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

செய்முறை -4

ஒரு கிண்ணத்தில் 1 கப் வறுக்காத ரவை சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 கப் காய்ச்சிய பால் ஊற்ற வேண்டும். ரவையும் பாலும் 15 நிமிடங்கள் ஊற  வேண்டும்.

செய்முறை -5

ரவை நன்றாக ஊறிய பின் அதை ஒரு மிக்ஸியில் போட்டு அதனுடன் கால் கப் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

செய்முறை -6

பின்னர் ரவை மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். பின் தோசை கல்லில் சிறிய சிறிய அளவில் தோசை போல ஊற்ற வேண்டும்.

செய்முறை -7 

பூர்ணம்

  • பின் அதில் நாம் இனிப்பாக அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் பாசிப்பருப்பு கலவையை வைத்து தோசையின் ஓரங்களில் தண்ணீர் தடவி ஓட்ட வேண்டும்.

இதுபோல ஒட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

செய்முறை -8

பிறகு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து இவற்றை பொன்னிறமாக பொறித்து எடுத்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் நண்பர்களே… தீபாவளி ஸ்பெஷல் ரவா தம்பிங் ஸ்வீட் ரெடி… அனைவரும் ரவா தம்பிங் ஸ்வீட் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்..!

புதிய சுவையில் தீபாவளி ஸ்பெஷல் லட்டு இப்படி செஞ்சி பாருங்க..!

 

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement