ரவா உருண்டை செய்வது எப்படி?
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் தீபாவளிக்கு செய்யக்கூடிய ரவா உருண்டைதான். தீபாவளி என்றால் முறுக்கு, அதிரசம், ரவா உருண்டை செய்வது வழக்கம், ஆனால் இந்த காலத்தில் யார் தீபாவளிக்கு வீட்டில் பலகாரம் செய்வது. அப்படி யாரும் இல்லை அனைவருமே கடைகளில் தான் வாங்குகிறார்கள் அப்படி இருக்கும் போது, இதனை யார் செய்ய போகிறார்கள் என்று நினைப்பீர்கள். அதுவும் உண்மைதான், ஆனால் ஒரு சிலருக்கு செய்ய தெரியாமல் கூட இருக்க வாய்ப்புகள் உள்ளது. அவர்களுக்கு இந்த பதிவானது உதவியாக இருக்கும். வாங்க ரவா உருண்டை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்..!
ரவா உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:
இதை செய்வதற்கு முன் ஒரு விஷயம் இந்த உருண்டை 15 நாட்களுக்கு மேல் நன்றாக இருக்கும் ஆகவே இதை செய்து ஊருக்களுக்கும் எடுத்து செல்லாம். இப்போது கவலை இல்லாமல் செய்யலாம் சரி தேவையான பொருட்கள்
- ரவை – 1 கப்
- சக்கரை – 1 கப்
- நெய் – 1/4 கப்
- ஏலக்காய் – 1
- முந்திரி – 8
ஸ்டேப்: 1
முதலில் அடுப்பை பற்றவைக்கவும் அதன் பின் அதில் கனமான பாத்திரத்தை வைக்கவும். பின்பு அதில் ரவையை நிறம் மாறாமல் வறுக்கவும்.
நன்றாக வறுத்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு சூடு ஆரியவுடன் அதை மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும். பின்பு அதனை சல்லடையில் சலித்து எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 2
மிக்சி ஜாரில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து இரண்டையும் மிருதுவாக அரைத்து தனியாக வைக்கவும்.
ஸ்டேப்: 3
கடாயில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை உடைத்து சேர்த்து வறுத்துக்கொள்ளவும். அதனுடன் ரவை சக்கரை கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஸ்டேப்: 4
கையில் சூடு தாங்கும் பதத்தில் மாவை எடுத்து உருண்டையாக பிடிக்கவும். உருண்டை வரவில்லையென்றால் நெய் ஊற்றி சூடு செய்து கொள்ளவும் அடுப்பு மீடியம் ப்ளெமில் இருக்கவேண்டும். அதன் பின் உருண்டை பிடிக்கவும்.
அவ்வளவு தாங்க ரவா உருண்டை ரெடி 15 நாட்களுக்கு மேல்கூட வைத்து சாப்பிடலாம். என்னங்க தீபாவளிக்கு ரெடியா 🤔 வாங்க செய்யலாம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |