சமையல் செய்து அசத்துவீர்களா..! அப்போ உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா..?

samayal kurippu in tamil

Samayal Tips in Tamil

வணக்கம் நண்பர்களே..! சமையலை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்வார்கள். ஆனால் எல்லாரும் சமையலை ருசியாக செய்ய மாட்டார்கள். உணவின் ருசி 365 நாளும் ருசியாக இருக்காது. நாம் வைக்கும் குழம்பை விட இன்னொருவர் வைக்கும் குழம்பு ருசியாக இருக்கும். அப்படி என்ன தான் குழம்பில் சேர்க்கிறார்கள் என்று யோசிப்பீர்கள். நீங்களும் சமையலில் புலியாக இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ 20 சிறந்த சமையல் அறை டிப்ஸ்..! 

பூ போல இட்லி செய்வது எப்படி.?

இட்டலி அரைப்பதற்கு உளுந்து சேர்ப்போம். ஆனால் உளுந்தின் அளவானது சரியாக சேர்ப்போம். இனிமேல் கொஞ்சம் அதிகமான உளுந்தை சேர்த்து அரையுங்கள். அதோடு வெள்ளை அவல் 1 கைப்பிடி ஊறவைத்து அரைத்து பாருங்கள். இட்லி பூ போல மிருதுவாக இருக்கும்.

பூரி உப்பி வர:

பூரி தேய்க்கும் போது பூரி கட்டையில் கோதுமை மாவு பயன்படுத்தாமல் எண்ணெய் பயன்படுத்தி தேய்க்க வேண்டும். பூரி மாவு பிசையும் போது சிறிதளவு சர்க்கரை சேர்த்து கொள்ள வேண்டும். இப்படி சேர்த்தால் பூரி உப்பும்.

கரி குழம்பு:

கரி குழம்பிற்கு தேங்காய் அரைக்கும் பொழுது கசகசா சேர்த்து அரைக்க வேண்டும். தாளிக்கும் போது சோம்பு சேர்த்து தாளியுங்கள். மசாலா அரைக்கும் போது முந்திரி சிறிதளவு சேர்த்து கொள்ளுங்கள். இப்படி செய்தீர்கள் என்றால் சுவை சும்மா அள்ளும்.

மீன் வறுவல் உதிராமல்:

மீன் வறுக்கும் போது மசாலா உதிராமல் இருக்க முட்டையை உடைத்து மசாலாவுடன் கலந்து வைத்து பாருங்கள். பின் வறுத்து எடுங்கள் மசாலா உதிராமல் ருசியாக இருக்கும்.

லெமன் சாதம் & புளி சாதம்:

பூண்டு, வெந்தயம், பெருங்காய தூள், நிலக்கடலை, காய்ந்த மிளகாய் போன்றவையை எண்ணெயில் வறுத்து கொள்ளவும். பின் வறுத்ததை தூளாக அரைத்து கொள்ளவும். இந்த பொடியை லெமன் சாதம், புளி சாதம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

தக்காளி சமையல்:

தக்காளியை உணவில் சேர்க்கும் போது தக்காளியின் விதைகளை நீக்கி விட்டு உணவில் சேருங்கள். தக்காளியின் விதைகளை நீக்கி உணவில் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரகங்களுக்கு நல்லது.

கருணைக்கிழங்கு வறுவல்:

கருணைக்கிழங்கை அரை பதமாக வேக வைத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்புத் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, கொஞ்சம் கருவேப்பிலை போன்றவை சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவையுங்கள். பின் தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் பிரட்டி வேக வைத்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

அப்பளம் துவையல்:

அப்பளம் பொறித்தது அதிகமாக இருந்தால் அதை மிக்சியில் சேர்க்கவும்.  அதனுடன்  தேங்காய், புளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். அவ்ளோ தாங்க அப்பளம் துவையல் சூப்பராக இருக்கும்.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal