சாம்பார் செய்வது எப்படி தமிழில் | Sambar Recipe in Tamil
சாம்பார் செய்வது எப்படி? அசைவ பிரியர்கள் கூட விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது சாம்பார் தான். சைடிஷாக உருளைக்கிழங்கு வறுவல் இருந்தால் குழந்தைகள் கூட வேணும், வேணாம் என்று சாப்பிடுவார்கள். சாதாரணமாக நாம் வைக்கும் இந்த சாம்பாரையே எல்லோரும் விரும்பி சாப்பிடும் போது, கல்யாண வீட்டில் செய்யும் சாம்பார் எவ்வளவு ருசியாக இருக்கும். இந்த தொகுப்பில் கல்யாண வீட்டு காய்கறி சாம்பார் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் – 2
- வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கியது)
- தக்காளி – 2 (நீளவாக்கில் நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 4 (கீறியது)
- சாம்பார் பொடி – 4 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
- பருப்பு – தேவையான அளவு (வேக வைத்தது)
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- புளிக்கரைசல் – தேவையான அளவு
- தேங்காய் – அரைத்தது (சிறிதளவு)
- கத்திரிக்காய் – தேவையான அளவு (நறுக்கியது)
- கேரட் – தேவையான அளவு (நறுக்கியது)
- முருங்கைக்காய் – தேவையான அளவு (நறுக்கியது)
- கொத்தமல்லி – சிறிதளவு (நறுக்கியது)
- கருவேப்பிலை – சிறிதளவு
- பெருங்காய தூள் – அரை டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஸ்டேப்: 1
Sambar Recipe in Tamil: முதலில் தேவையான அளவு பருப்பை எடுத்து அதில் மஞ்சள் தூள், பெருங்காய தூள் மற்றும் 1 நறுக்கிய தக்காளி சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
ஸ்டேப்: 2
Sambar Seivathu Eppadi: பின் ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடான பிறகு 1 டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம், சிவப்பு மிளகாய் 2, கருவேப்பில்லை சிறிதளவு சேர்த்து வதக்கவும்.
ஸ்டேப்: 3
Sambar Recipe in Tamil: அதன் பிறகு அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் 2, கீறிய பச்சை மிளகாய் 4, நீளவாக்கில் நறுக்கிய தக்காளி 2 சேர்த்து பாதியளவு வதக்கி கொள்ளவும்.
ஸ்டேப்: 4
Sambar Seivathu Eppadi: பின் தேவையான அளவு நறுக்கிய கேரட், முருங்கைக்காய், கத்தரிக்காய், பீன்ஸ் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றவும். பின் அதில் அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், பெருங்காய தூள் சிறிதளவு சேர்த்து வேக வைக்கவும்.
ஸ்டேப்: 5
Sambar Seivathu Eppadi: காய்கறிகள் பாதியளவு வெந்த பிறகு நாம் வேகவைத்த பருப்பு தண்ணியை அதில் ஊற்றி மிக்ஸ் செய்து கொதிக்க வைக்கவும்.
ஸ்டேப்: 6
Sambar Recipe in Tamil: குழம்பு கொதிக்கும் போது அதில் 6 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி மற்றும் அரைத்து வைத்த தேங்காயை ஊற்றவும். பின் அதில் தேவையான அளவு புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதன் மேல் சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான கல்யாண வீட்டு காய்கறி சாம்பார் தயார்.
ஹோட்டல் இட்லி சாம்பார் செய்வது எப்படி? |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |