பருப்பு இல்லாமல் மணக்க மணக்க இட்லி சாம்பார் ரெசிபி | Idli Sambar Recipe Without Dal in Tamil
பொதுவாக இட்லி, தோசை, பொங்கலுக்கு மிகவும் சிறந்த சைடிஸ் சாம்பார் தான். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக சாம்பார் வைப்பார்கள். அதனுடைய சுவையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிலருக்கு இட்லி சாம்பார் எப்படி வைக்க வேண்டும் என்பது கூட தெரியாது. சிலர் மிக அருமையாக இட்லி சாம்பார் வைப்பார்கள். இன்றைய பதிவில் நாம் பருப்பு இல்லாமல் மணக்க மணக்க இட்லி சாம்பார் 10 நிமிடத்தில் எப்படி வைக்கலாம் என்பது பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த சாம்பரை யார் வேண்டுமானாலும் மிக எளிதாக செய்துவிடலாம். சரி வாங்க அது எப்படி என்று பார்ப்போம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- பெரிய வெங்காயம் – 1 (மீடியம் சைசில் கட் செய்து கொள்ளுங்கள்)
- தக்காளி – 2 (பொடிதாக கட் செய்தது)
- பச்சை மிளகாய் – 5 {நீளமாக கட் செய்தது)
- மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
- பெருங்காயம் தூள் – ¼ ஸ்பூன்
- எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
- கடுகு – 1 ஸ்பூன்
- சீரகம் – ½ ஸ்பூன்
- வரமிளகாய் – 2
- கருவேப்பிலை – சிறிதளவு
- சாம்பார் பொடி – 1½ ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கடலை மாவு – 3 ஸ்பூன்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இட்லி, தோசைக்கு இந்த சட்னி செய்து பாருங்க.!
செய்முறை – Sambar Without Dal:
ஒரு குக்கரை எடுத்துக்கொள்ளவும் அதில் கட் செய்து வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும்.
பின் அதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயம் தூள் மற்றும் 1½ டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை நன்றாக மூடி, மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு குக்கரை திறந்து அவற்றில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி விட்டு தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை மத்தை பயன்படுத்தி கடைந்துகொள்ளுங்கள்.
பிறகு வடித்து வைத்துள்ள தண்ணீரையும் அதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வரமிளகாய், கருவேப்பிலை ஆகியவரை சேர்த்து தாளித்து. கடைந்து வைத்துள்ள தக்காளி வெங்காயம் கலவையையும் அதனுடன் சேர்க்கவும்.
பின் சாம்பார் பொடி, தண்ணீர் இரண்டு கப் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவைக்க வேண்டும்.
5 நிமிடம் கழித்த பிறகு ஒரு பவுலில் மூன்று ஸ்பூன் கடலை மாவு மற்றும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும். இந்த கடலை மாவு கரைசலை அடுப்பில் வைத்துள்ள கவையுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 5 நிமிடம் வேகவைக்கவும்.
அவ்வளவு தான் பருப்பு இல்லாத இட்லி சாம்பார் தயார் இறுதியில் சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் சுவையான சாம்பார் ரெடி கண்டிப்பாக உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மீந்து போன இட்லியை இப்படி செஞ்சி பாருங்க..! டேஸ்ட் சும்மா அள்ளும்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |