சத்து மாவு செய்முறை அதன் பயன்கள் மற்றும் சத்து மாவு ரெசிபிஸ்..!

சத்து மாவு செய்முறை

சத்து மாவு Recipe – சத்து மாவு செய்முறை மற்றும் அதன் பயன்கள்..!

சத்து மாவு செய்முறை – நவதானியங்கள் அடங்கிய சத்து மாவை வீட்டிலேயே எளிமையாக (Sathu Maavu Ingredients In Tamil) தயாரிக்கலாம். ஆரோக்கியமான சத்துமாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் குழந்தைக்கான உணவில் பெற்றோர் எப்போதும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல், அவை குழந்தைகளுக்கு உடல்நல பிரச்சனையை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு கொடுக்கும் நீர் கூட சுத்தமானதாக இருக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கென பதப்படுத்தப்பட்ட சத்து மாவுகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதை விட வீட்டில் தயாரித்து கொடுப்பதே சிறந்தது.

சத்து மாவு உருண்டை செய்முறை
சத்து மாவு புட்டு செய்முறை
சத்து மாவு கொழுக்கட்டை செய்வது எப்படி?
சத்துமாவு கஞ்சி செய்முறை

 

குழந்தைகளுக்கான ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி?

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

சரி இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏற்ற நவதானியன்களில் செய்ய கூடிய மிகவும் சுவையான சத்து மாவு செய்முறை, சத்து மாவு செய்வது எப்படி, சத்து மாவு செய்ய தேவையான பொருட்கள் (Sathu Maavu Ingredients In Tamil) ஆகிய விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

சத்து மாவு செய்முறை / சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் (Sathu Maavu Ingredients In Tamil):

 1. கேழ்வரகு – 1 கப்
 2. கம்பு – 1 கப்
 3. சோளம் – 1 கப்
 4. கோதுமை – 1 கப்
 5. புழுங்கல் அரிசி – 1 கப்
 6. பார்லி – 1 கப்
 7. ஜவ்வரிசி – 1 கப்
 8. பச்சை பயறு – 1 கப் 
 9. சோயா பீன்ஸ் – 1 கப்
 10. வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப்
 11. கருப்பு சுண்டல் – 1 கப்
 12. மக்காச்சோளம் – 1 கப்
 13. வேர்க்கடலை – 1 கப்
 14. பொட்டுக்கடலை – 1 கப்
 15. முந்திரி – 100 கிராம்
 16. பாதாம் – 100 கிராம்
 17. ஏலக்காய் – 50 கிராம்

சத்து மாவு செய்முறை ஸ்டேப்: 1

சத்து மாவு recipe – சமையல் செய்முறை விளக்கம் – முதலில் சத்து மாவிற்கு கொடுத்துள்ள (sathu maavu ingredients in tamil) பொருட்களில் கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை, பச்சை பயறு, வெள்ளை கொண்டைக்கடலை, கருப்பு சுண்டல், மக்கா சோளம் போன்றவற்றை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை நன்கு கழுவி, ஒரு துணியில் போட்டு மூட்டை கட்டி வைக்க வேண்டும்.

சத்து மாவு செய்முறை ஸ்டேப்: 2

பின் அதனை ஒரு நாள் முழுவதும் ஒவ்வொரு முறை அது காயும் போது, அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

சத்து மாவு செய்முறை ஸ்டேப்: 3

பிறகு மறுநாள் அந்த மூட்டையைத் திறந்து பார்த்தால், முளைக்கட்டியிருக்கும். பின் அதனை வெளியே வெயிலில் போட்டு நன்கு உலர வைக்க வேண்டும், அத்துடன் மீதமுள்ள பொருட்களையும் உலர வைக்க வேண்டும்.

சத்து மாவு செய்முறை ஸ்டேப்: 4

பின்பு மறுநாள் காயவைத்த அனைத்து பொருட்களையும் (Sathu Maavu Ingredients In Tamil) நன்றாக பொன்னிறமாக வறுத்துக்கொண்டு அதனை ரைஸ் மில்லில் கொடுத்து நன்கு மென்மையாக அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த சத்து மாவு பயன்கள்:

சத்து மாவு பயன்கள்: 1 இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது.

சத்து மாவு பயன்கள்: 2 குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

பச்சை பயிறு பயன்கள்: 1

உடலுக்கு வலிமை தரும் உணவுகள் (healthy food list): பச்சைப் பயிர் எலும்பு வளர்ச்சிக்கு, ரத்தம் ஓட்டத்திற்கு, குழந்தைகள் வளர்ச்சி குறைப்பட்டிற்கு, தசைகளை வலுவாக்குவதற்கு உதவுகிறது.

பச்சை பயிறு பயன்கள்: 2

மாவுச் சத்து, கொழுப்பு, கோலின், பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்பு, மெக்னீஷியம், நார்சத்து, தாமிரம், சோடியம் ஆகியவை ஒரளவு இருக்கின்றன. ஆகையால் இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.

ஆரோக்கியமான கருப்பட்டி ராகி கூல் மற்றும் ராகி பாதாம் மில்க் ஷேக்…

 சத்து மாவு Recipe – ஆரோக்கியத்தைத் தரும் சத்து மாவு உருண்டை எப்படி செய்வது ?

சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால், இதனை தினமும் உட்கொண்டு வருவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வேண்டுமானால் இதனை காலை வேளையில் கூட சாப்பிடலாம். அதிலும் டயட்டில் இருப்போர் இதனை காலை உணவாக உட்கொள்வது நல்லது.

குறிப்பாக குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பது மிகவும் சிறந்தது. இங்கு அந்த சத்து மாவு உருண்டையை எப்படி செய்வது என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை அன்றாடம் செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.

சரி வாங்க சத்து மாவு உருண்டை செய்வது எப்படி அதற்கு தேவையான பொருட்கள் (sathu maavu ingredients in tamil) என்னென்ன என்று இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

சத்து மாவு உருண்டை செய்ய – தேவையான பொருட்கள் (Sathu Maavu Ingredients In Tamil):

 1. சத்து மாவு – 1 கப்
 2. வெல்லம்/கருப்பட்டி – 1/3 கப்
 3. நெய் – 2 டேபிள் ஸ்பூன்
 4. ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
சுவையான ரவா குலாப் ஜாமுன் செய்முறை..!

சத்து மாவு உருண்டை செய்முறை: 1

சத்து மாவு recipe – சமையல் செய்முறை விளக்கம் – முதலில் சத்து மாவை ஒரு வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, 8-10 நிமிடம் நன்கு மணம் வெளிவரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சத்து மாவு உருண்டை செய்முறை: 2

சத்து மாவு recipe – சமையல் செய்முறை விளக்கம் – பின்னர் வெல்லம்/கருப்பட்டியை தட்டி/துருவிக் கொண்டு, ஒரு வாணலியில் போட்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, வெல்லம் நன்கு கரைந்து, சற்று கெட்டியாக தேன் போன்ற பதத்திற்கு வரும் போது அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

சத்து மாவு உருண்டை செய்முறை: 3

பின்பு அதனை வறுத்து வைத்துள்ள சத்து மாவில் சேர்த்து, அத்துடன் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.

சத்து மாவு உருண்டை செய்முறை: 4

பிறகு நெய்யை சூடேற்றி, அதனையும் சத்து மாவுடன் சேர்த்து நன்கு கிளறி உருண்டைகளாகப் பிடித்தால், சத்து மாவு உருண்டை ரெடி!சத்து மாவு Recipe – சத்து மாவு புட்டு செய்முறை விளக்கம் 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான சத்து மாவு புட்டு செய்வது எப்படி மற்றும் தேவையான பொருட்கள் (sathu maavu ingredients in tamil) என்னென்ன என்று இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

சத்து மாவு புட்டு செய்ய தேவையான பொருட்கள் (Sathu Maavu Ingredients In Tamil):

 1. சத்து மாவு (நவதானியங்களை வறுத்து, அரைத்த மாவு) – ஒரு கப்,
 2. தேங்காய் துருவல் – தேவையான அளவு
 3. சர்க்கரை – 1/4 கப்,
 4. ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
 5. எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
 6. உப்பு – ஒரு சிட்டிகை.

சத்து மாவு புட்டு செய்முறை: 1

சத்து மாவு recipe – சமையல் செய்முறை விளக்கம் – அகலமான பாத்திரத்தில் சத்து மாவை போட்டு… உப்பு, எண்ணெய் விட்டு பிசைந்து, சிறிதளவு தண்ணீரை மாவின் மீது தெளித்து, பிசைந்து வைக்கவும்.

சத்து மாவு புட்டு செய்முறை: 2

பிசைந்த மாவை இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இந்த மாவை கட்டிகள் இல்லாமல் கைகளால் உதிர் உதிராக உதிர்த்து, தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்… சத்தான புட்டு ரெடி!சத்து மாவு Recipe – சத்து மாவு கொழுக்கட்டை செய்வது எப்படி?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான சத்து மாவு கொழுக்கட்டை செய்வது எப்படி சத்து மாவு ரெசிபி செய்ய தேவையான பொருட்கள் (sathu maavu ingredients in tamil) என்னென்ன என்று இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

சத்து மாவு கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள் (Sathu Maavu Ingredients In Tamil):

 1. சத்து மாவு – ஒரு கப்
 2. பாதாம் – நான்கு
 3. காய்ந்த திராட்சை – நான்கு
 4. முந்திரி – நான்கு
 5. ஏலக்காய் பவுடர் – கால் டீஸ்பூன்
 6. உப்பு – தேவைகேற்ப
 7. தேங்காய் துருவல் – கால் கப்
 8. நெய் – இரண்டு டீஸ்பூன்
 9. தண்ணீர் – தேவையான அளவு

சத்து மாவு கொழுக்கட்டை செய்முறை விளக்கம்: 1

ஒரு பாத்திரத்தில் சத்து மாவு, முந்திரி, காய்ந்த திராட்சை, பாதாம், தேவையான அளவு உப்பு, ஏலக்காய் பவுடர், தேங்காய் துருவல், நெய் போட்டு நன்றாக கிளறி தண்ணீர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசையவும்.

சத்து மாவு கொழுக்கட்டை செய்முறை விளக்கம்: 2

பிறகு கொழுக்கட்டை போல் கையில் பிடித்து இட்லி பானையில் 10 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.சத்து மாவு Recipe – சத்துமாவு கஞ்சி செய்முறை விளக்கம்:-

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான சத்து மாவு கஞ்சி செய்வது எப்படி சத்து மாவு ரெசிபி செய்ய தேவையான பொருட்கள் (sathu maavu ingredients in tamil) என்னென்ன என்று இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

சத்து மாவு Recipe – தேவையான பொருட்கள் (sathu maavu ingredients in tamil):-

 1. சத்து மாவு – 2 ஸ்பூன்
 2. பால் – 1 டம்ளர்
 3. உப்பு – சிட்டிகை
 4. சர்க்கரை – தேவையான அளவு
 5. ஏலக்காய் தூள் – சிறிதளவு
 6. தேங்காய் துருவல் – சிறிதளவு

சத்து மாவு கஞ்சி செய்முறை விளக்கம்: 1

ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அத்துடன் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.

சத்து மாவு கஞ்சி செய்முறை விளக்கம்: 2

தண்ணீர் கொதிப்பதற்குள், ஈரமில்லாத ஒரு பாத்திரத்தில் சத்து மாவு போட்டு, அத்துடன் பால் சேர்த்து கட்டி சேராதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

சத்து மாவு கஞ்சி செய்முறை விளக்கம்: 3

அடுப்பில் உள்ள தண்ணீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து, அதில் கலந்து வைத்துள்ள சத்து மாவை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

சத்து மாவு கஞ்சி செய்முறை விளக்கம்: 4

சத்து மாவில் இருந்து பச்சை வாசனை போய், ஓரளவு கெட்டியாக இருக்கும் போது, அதனை இறக்கி அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலந்தால், பின்பு சிறிதளவு ஏலக்காய் தூள் மற்றும் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விடவேண்டும், அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான சத்து மாவு கஞ்சி ரெடி!!!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!