தீபாவளி ஸ்பெஷல் சீப்பு சீடை | Seepu Murukku Recipe in Tamil

Seepu Murukku Recipe in Tamil

சீப்பு முறுக்கு செய்வது எப்படி | Seepu Murukku Seivathu Eppadi

தீபாவளி என்றாலே வித விதமான பலகாரம் செய்வது வழக்கம். இந்த வருடம் தீபாவளிக்கு ட்ரெண்டிங்காக பலகாரம் செய்ய நினைப்பவர்கள் சீப்பு சீடை செய்யுங்கள். வீட்டில் இருக்கக்கூடியவர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரியப்பட்டு சாப்பிடக்கூடிய ஒன்று இந்த சீப்பு சீடை. இந்த சீடையானது பார்ப்பதற்கு மிகவும் சிவந்த தன்மையுடனும், சுருள் போன்ற வடிவத்திலும் எதிர்பார்க்காத அளவிற்கு செம டேஸ்டாக இருக்கும். அப்படிப்பட்ட சீப்பு சீடையை எளிமையான முறையில் தீபாவளி ரெசிபியாக எப்படி செய்து அசத்தலாம் என்று தெரிஞ்சிக்கலாம் வாங்க.

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் செய்வது எப்படி?

சீப்பு சீடை – செய்ய தேவையான பொருள்:

  1. அரிசி மாவு – 1 கப்
  2. உளுத்தம் மாவு – 1/4 கப்
  3. கடலை மாவு – 1/4 கப்
  4. கெட்டியான தேங்காய் பால் – 1/4 கப்
  5. வெண்ணெய் – 1 டீஸ்பூன்
  6. உப்பு – தேவையான அளவு
  7. எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
  8. சுடுநீர் – தேவையான அளவு

சீப்பு சீடை செய்முறை விளக்கம்: 

ஸ்டேப் 1: சீப்பு சீடை செய்வதற்கு முதலில் ஒரு சிறிய பௌலில் அரிசி மாவு 1 கப், 1/4 கப் உளுத்தம் மாவு மற்றும் 1/4 கப் கடலை மாவு சேர்த்து, அதனுடன் தேவையான அளவிற்கு உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும்.

ஸ்டேப் 2: பிசைந்து வைத்ததில் கெட்டியான தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடுபடுத்தி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சாஃப்ட்டாக பிசைந்து வைத்து கொள்ள வேண்டும். தேங்காய் பால் பத்தவில்லை என்றால் வெந்நீர் சிறிதளவு மாவில் ஊற்றி பிசைந்து கொள்ளலாம்.

தீபாவளி ஸ்வீட் செய்வது எப்படி?

 

ஸ்டேப் 3: அதன் பிறகு முறுக்கு உழக்கை எடுத்துக் கொண்டு, தட்டையாக சீப்பு போன்று இருக்கும் அச்சினை எடுத்து முறுக்கு உலக்கையில் செட் செய்துக்கொள்ளவும்.

ஸ்டேப் 4: பொருத்திய பிறகு, பின் உலக்கையில் பிசைந்த மாவினை வைத்து, ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போன்று பிழிய வேண்டும். பின் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, பின் அதனை உருட்டிக் கொள்ள வேண்டும்.

ஸ்டேப் 5: இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் காய வைக்க வேண்டும். துண்டுகளாக உருட்டி வைத்துள்ளதைப் போட்டு எண்ணையில் நன்றாக பொரித்து எடுக்க வேண்டும். சூப்பரான சுவையான  சீப்பு சீடை ரெடியாகிவிட்டது.

தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் பர்பி செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil