உங்க வீட்ல பிரட் இருக்கா..? அப்போ இந்த ரெசிபி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க..!

Advertisement

Shahi Tukda Recipe in Tamil

பள்ளி விட்டு வீட்டுக்கு திரும்பி வரும் உங்களின் குழந்தைகளுக்கு ஏதாவது புதுமையான ஸ்னாக்ஸ் செய்து தர வேண்டும். அதிலும் அந்த ஸ்னாக்ஸ் அவர்களுக்கு பிடிக்கின்ற வகையிலும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உள்ளதா..? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காகத் தான். ஆம் நண்பர்களே இந்த பதிவில் உங்களுக்கு பயனுள்ள மற்றும் எளிமையான முறையில் வீட்டிலேயே உங்களின் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த Shahi Tukda செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

Shahi Tukda Recipe in Tamil:

Shahi tukda ingredients in tamil

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. பால் – 2 1/2 கப் 
  2. பால் பவுடர் – 1/4 கப் 
  3. பிரட் – 4
  4. சர்க்கரை – 1/4 கப் 
  5. குங்குமப் பூ – 1 சிட்டிகை 
  6. சோள மாவு – 1 டீஸ்பூன்
  7. ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்  
  8. நெய் – 2 டேபிள் ஸ்பூன் 
  9. பாதாம் – 10
  10. பிஸ்தா – 10

செய்முறை:

ஸ்டெப் – 1

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 1/2 கப் பாலினை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.

இதையும் படியுங்கள்=> 5 நிமிடத்தில் பிரட் உப்புமா செய்வது எப்படி

ஸ்டெப் – 2

அதனுடன் 1/4 கப் பால் பவுடர், 1/4 கப் சர்க்கரை, 1 சிட்டிகை குங்கும பூ மற்றும் 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூளினையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

ஸ்டெப் – 3

அது நன்கு கொதித்த பிறகு அதனுடனே 1 டீஸ்பூன் சோள மாவினை சிறிதளவு தண்ணீரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது அது ஓரளவு கெட்டியாகி விடும். அதனை அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளுங்கள்.

ஸ்டெப் – 4

அடுத்து 4 பிரெட்டுகளின் ஓரங்களை நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் நெய்யினை ஊற்றி அதில் நாம் ஓரங்களை நறுக்கி வைத்துள்ள பிரெட்டுகளை சேர்த்து நன்கு பொறித்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் – 5

பின்னர் அதனை நாம் முன்னரே தயாரித்து வைத்துள்ள கலவையில் பொரித்த பிரட்டை சேர்த்து அதன் மீது 10 பாதாம் மற்றும் 10 பிஸ்தா ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.

இப்பொழுது நமது சுவையான Shahi Tukda தயாராகிவிட்டது வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த Shahi Tukda ரெசிபியை உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முறை செய்து தந்து பாருங்கள் அவர்கள் மீண்டும் விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள்.

 

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

பிரட் சில்லி செய்வது எப்படி

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்

 

Advertisement