இப்படி செய்ங்க காளான் கிரேவியை – செம்ம டேஸ்ட்..!

Advertisement

சப்பாத்தி காளான் கிரேவி (mushroom gravy) செய்யலாம் வாங்க..!

சிலருக்கு அசைவ உணவுகள் பிடிக்காது. இருந்தாலும் அசைவ உணவில் இருக்கும் சுவையும் மனமும் சைவ உணவில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் காளான் சமைத்து சாப்பிடுங்கள், காளான் உடலுக்கும் நல்ல மருத்துவ பயனளிக்கிறது, அதேபோல் மிகவும் சுவையாகவும் ருசியாகவும் அசைவ உணவுகளுக்கு நிகராகவும் இருக்கும்.

சரி வாங்க இந்த பகுதியில் சப்பாத்தி காளான் கிரேவி (mushroom gravy) எப்படி செய்வது என்று இப்போது நாம் காண்போம்.

கோபி மஞ்சூரியன் செய்முறை..!

சப்பாத்தி காளான் கிரேவி (mushroom gravy) செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  1. காளான் – 1 பாக்கெட்
  2. மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  3. மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  4. எண்ணெய் – தேவையான அளவு
  5. உப்பு – தேவையான அளவு
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்

காளான் மசாலா அரைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள்:

  1. வெங்காயம் – 1
  2. தக்காளி – 2
  3. பட்டை – 1 இன்ச்
  4. துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
  5. ஏலக்காய் – 1
  6. கிராம்பு – 2
  7. சீரகம் – 1 டீஸ்பூன்
  8. சோம்பு – 2 சிட்டிகை
  9. கொத்தமல்லி – சிறிது

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான வெஜ் நூடுல்ஸ் ரெசிபி !!!

சப்பாத்தி காளான் கிரேவி செய்முறை:

சப்பாத்தி காளான் கிரேவி (mushroom gravy) செய்வதற்கு முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், மசாலா அரைப்பதற்கு மேல் கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும், அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, காளானையும் உடன் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், காளான் கிரேவி (mushroom gravy) ரெடி…

சிக்கன் பரோட்டா செய்முறை..!

காளான் மருத்துவ பயன்கள்:

காளான் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைகிறது, அதேபோல் மாரடைப்பு வராமல் தடுக்கிறது, உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து, இரத்தத்தை சுத்தம் செய்வதற்கு பெரிதும் உதவுகிறது.

இந்த காளான் அதிகளவு உட்கொண்டு வந்தால் மலட்டுத்தன்மை மற்றும் பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றை இந்த காளான் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை தடுத்துவிட முடியும்.

காளான் எச்சரிக்கை குறிப்பு :

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மையுடையது என்பதால், பாலூட்டும் தாய்மார்கள் காளான் சாப்பிடுவதை தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement