சின்ன வெங்காயத்தில் சட்னி..! | Small Onion Chutney In Tamil
நாம் வீட்டில் தினமும் சமைக்கும் பொழுது என்ன சட்னி அரைப்பது என்று தினமும் யோசிப்போம். தினமும் இதே சட்னியா என்று நம் குழந்தைகள் சாப்பிடாமல் அடம் பிடிப்பார்கள். இன்றைய பதிவில் வறுத்த வெங்காய சட்னி தான் பார்க்கப்போகிறோம். இந்த சட்னியை அரைத்து மொறு மொறு என்று தோசை சுட்டு கொடுங்கள் உங்கள் குழந்தைகள் அடம் பிடிக்காமல் சாப்பிடுவார்கள்.
நம் வீட்டில் சிறிய குழந்தைகள் இருந்தாலே அவர்களை எப்படி சாப்பிட வைப்பது என்று தெரியாமல் நாம் இருப்போம். எதை செய்து கொடுத்தாலும் குழந்தைகள் சாப்பிட மாட்டிங்குறாங்க என்று அம்மாக்கள் கவலை கொள்கின்றனர். உங்களுக்காகவே இன்றைய பதிவில் வறுத்த வெங்காய சட்னி எப்படி அரைப்பது என்று தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
சுவையான கடப்பா சட்னி செய்வது எப்படி..?
வறுத்த வெங்காய சட்னி:
குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கு புதிதாக வறுத்த வெங்காய சட்னியை எப்படி செய்வது என்ற முறையை கீழே கொடுத்துளோம்.
தேவையான பொருட்கள்:
- மிளகாய் – 6
- பூண்டு – 10
- சின்ன வெங்காயம் – 20
- கருவேப்பில்லை – 1 கொத்து
- புளி – எலுமிச்சை பழம் அளவு
- நாட்டுச்சர்க்கரை – 1 தேக்கரண்டி
- வேர்க்கடலை – 1 கோப்பை
- தேங்காய் – 10 துண்டுகள்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி எண்ணெயை நன்கு காய விட வேண்டும்.
- எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு அதில் 6 மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வரை நன்கு வறுக்க வேண்டும்.
- வறுத்த மிளகாயை தனியாக ஒரு பாத்திரத்தில் மற்ற வேண்டும்.
- அதன் பிறகு அதே பாத்திரத்தில் 10 பல் பூண்டு 20 சின்ன வெங்காயம் சேர்த்து 10 முதல் 15 நிமிடம் வரை நன்கு வறுக்க வேண்டும்.
- அதன் பிறகு அதில் 1 கொத்து கருவேப்பில்லை மற்றும் எலுமிச்சை அளவு புளி சேர்த்து 5 நிமிடம் வரை வறுக்க வேண்டும்.
- அதன் பிறகு 1 தேக்கரண்டி நாட்டுச்சர்க்கரை மற்றும் 1 கோப்பை வேர்க்கடலை சேர்த்து 10 நிமிடம் நன்கு வறுக்க வேண்டும்.
- அதன் பிறகு 10 துண்டுகள் தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வறுக்க வேண்டும்.
- அனைத்து பொருள்களும் நன்கு வறுத்த பிறகு 10 நிமிடம் அதை ஆற விடுங்கள்.
- இப்போது முதலில் வறுத்த மிளகாய் மற்றும் பாத்திரத்தில் ஆற வைத்த பொருட்களை சேர்த்து மிக்ஸிஜாரில் சிறிய அளவு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.
- அரைத்த சட்னியை மிக்ஸிஜாரில் இருந்து கிண்ணத்திற்கு மாற்றிய பிறகு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்ற வேண்டும்.
- அதன் பிறகு உங்கள் குழந்தைகளுக்கு மொறு மொறு என்று தோசை ஊற்றி சட்னியை வைத்து கொடுங்கள் அடம்பிடிக்காமல் தோசையை சாப்பிட்டு முடித்துவிடுவார்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |