5 நிமிடத்தில் மொறுமொறுனு ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க..!

Advertisement

5 நிமிடத்தில் மொறுமொறுனு ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க..!

Rava snacks recipes in tamil:-

வணக்கம் நண்பர்களே இன்று நாம் ஒரு கப் ரவையை பயன்படுத்தி சுவையாக மற்றும் மொறுமொறுப்பான ஸ்னாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ஸ்னாக்சினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ஸ்னாக்சினை ஒரு முறை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால், பலமுறை செய்து தர சொல்லி அடம்பிடிப்பார்கள். சரி வாங்க ரவையை பயன்படுத்தி செய்ய கூடிய ருசியான ஸ்னாக்சினை (Rava snacks recipes in tamil) செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான சமையல் முட்டை கொத்து சப்பாத்தி செய்முறை..!

தேவையான பொருட்கள்:-

  1. ரவை – ஒரு கப்
  2. தண்ணீர் – இரண்டு கப்
  3. சீரகம் – ஒரு ஸ்பூன்
  4. வரமிளகாய் துகள்கள் (chilli flakes) – ஒரு ஸ்பூன்
  5. உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து தோல் நீக்கி கொள்ளுங்கள்)
  6. கொத்தமல்லி இலைகள் –  சிறிதளவு (பொடிதாக நறுக்கியது)
  7. உப்பு – தேவையான அளவு
  8. எண்ணெய் – 1/2 லிட்டர்

Rava snacks recipes in tamil :- 

செய்முறை:-

Step: 1

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு கப் தண்ணீர், 2 ஸ்பூன் ஆயில், தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் வரமிளகாய் துகள்கள் (chilli flakes) ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

Step: 2

தண்ணீர் நன்கு கொதித்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக்கொள்ளுங்கள், பின் ஒரு கப் ரவையை கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து கட்டிகள் பிடிக்காதவாறு கிளறிவிடுங்கள்.

தண்ணீர் நன்கு வற்றி ரவை வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ரவையை நன்கு ஆறவையுங்கள்.

நாவிற்கு சுவையூட்டும் காலிஃபிளவர் வடை செய்வது எப்படி..?

 

Step: 3

ரவை நன்கு ஆறியதும் வேகவைத்த இரண்டு உருளைக்கிழங்கினை எடுத்து நன்றாக மசித்து கொள்ளுங்கள், பின் வேகவைத்த ரவையுடன் இந்த உருளைக்கிழங்கினை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

Step: 4

rava recipe 1

பின் பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து பிசைய வேண்டும். அதாவது சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைய வேண்டும்.

rava recipe 2

Step: 5

பின் சப்பாத்தி தேய்க்கும் பலகையை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் சிறிதளவு பிசைந்த ரவை மாவை எடுத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் நீளமாக தேய்த்து கொள்ளுங்கள்.

rava recipe 3

Step: 6

பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 1/2 லிட்டர் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும் கட் செய்து வைத்துள்ள துண்டுகளை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சுவையான ரசமலாய் செய்வது எப்படி..!

 

இப்பொழுது சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஸ்னாக்ஸ் தயார்.. உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள். நன்றி வணக்கம்..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement