Soya Pepper Fry Recipe in Tamil
தினமும் புதிது புதிதாக சாப்பிட வேண்டும் என்று நிறைய நபர்கள் ஆசைப்படுபவர்கள். அது சோயாவை நிறைய நபர்களுக்கு பிடிக்கும். இதனை வறுத்து, பொரித்து தான் சாப்பிடுவார்கள். சோயா என்றால் ஒண்ணுமில்லைங்க மீள் மேக்கர் தான். அதனால் தான் இந்த பதிவில் சோயாவில் பெப்பர் பிரை செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சோயா பெப்பர் பிரை செய்ய தேவையான பொருட்கள்:
- மீன் மேக்கர்- 1/4 கப்
- மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
- மல்லி தூள்-1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள்-1 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு பேஸ்ட் –1 தேக்கரண்டி
- அரிசி மாவு –1 தேக்கரண்டி
- சோள மாவு – 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை- சிறிதளவு
- கொத்தமல்லி- சிறிதளவு
- எண்ணெய்- 200 மில்லி லிட்டர்
- வெங்காயம்- 2
- தக்காளி- 1
சோயா பெப்பர் பிரை செய்முறை:
முதலில் ஒரு கப் மீள் மேக்கரை எடுத்து சூடாக உள்ள தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். இதனை பச்சை தண்ணீரில் நன்றாக கழுவி கொள்ளவும். இதனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதனுடன் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி சோம்பு, 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 தேக்கரண்டி அரிசி மாவு, சிறிதளவு கருவேப்பிலை, 1 தேக்கரண்டி சோள மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளளவும்.
பிறகு அடுப்பில் கடாய் வைத்து அதில் 200 மில்லி லிட்டர் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கலந்து வைத்துள்ள மீள் மேக்கரை பொரித்து தனியாக எடுத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும். வெங்காயம் சிவந்த நிறம் வந்ததும் 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட், சிறிதளவு கருவேப்பிலை, 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள், 1 தேக்கரண்டி மல்லி தூள், காரத்திக்கேற்ப மிளகாய் தூள், 1 தக்காளியை அரைத்து அதனை பேஸ்ட்டாக அரைத்து அதனையும் சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் அதில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதன் பிறகு ரெடி செய்து வைத்திருக்கின்ற சோயாவை சேர்த்து கொள்ளவும். அதனுடன் மிளகு தூள் சேர்த்து எண்ணெய் ஊற்றி கொஞ்ச நேரம் வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |