சுவையான ரொம்பவே ஈஸியான பைன் ஆப்பிள் ரவா கேசரி (pineapple rava kesari) :
வணக்கம் ப்ரண்ட்ஸ்., உங்கள் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்துட்டாங்களா, அவங்களுக்கு செய்து கொடுக்க ஒண்ணுமில்லையா, அட கவலையை விடுங்க. அவர்களுக்கு விருந்தளிக்க ரவை மற்றும் பைன் ஆப்பிள் கொஞ்சம் இருந்தால் போதும். அதை சாப்பிட்டு, டேஸ்டில் உங்களை புகழ்ந்து தள்ளிடுவாங்க பாருங்க.
இப்போது இந்த பைன் ஆப்பிள் ரவா கேசரி (pineapple rava kesari) எப்படி செய்யலாம்னு பார்ப்போம் வாருங்கள்…
பைன் ஆப்பிள் ரவா கேசரி (pineapple rava kesari) செய்ய தேவையான பொருள்கள் :
1.வெள்ளை ரவை – 1 கப்
2.நெய் – 2 டேபிள் ஸ்பூன்
3.முந்திரி, காய்ந்த திராட்சை – 15 (அ ) 20
4.பைன் ஆப்பிள் – 1 கப் (சிறு துண்டுகளாக வெட்டியது)
5.ஏலக்காய் பவுடர் – வாசனைக்கு தேவையான அளவு
6.கேசரி பவுடர் (மஞ்சள் நிறம்) – 1 ஸ்பூன்
7.சர்க்கரை – தேவையான அளவு
மீந்து போன சாதத்தில் சூப்பரான ஹல்வா செய்யலாம் வாங்க ..!
பைன் ஆப்பிள் ரவா கேசரி செய்முறை :
முதலில் ஒரு கப் ரவாவிற்கு 2 அல்லது 2 1/2 கப் தண்ணீரை நன்கு கொதிக்க விடுங்கள். பிறகு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதனுடன் முந்திரி, திராட்சை ஆகியவற்றை நன்கு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் அதே கடாயில் நெய் எதுவும் சேர்க்க வேண்டியதில்லை, ரவாவை நன்கு வறுக்க வேண்டும் (5 அல்லது 6 நிமிடங்களுக்கு)
(குறிப்பு : ரவை வறுக்கும் போது ஸ்டவ் சிம்மில் இருந்தால் போதும்)
பிறகு வறுத்த ரவையுடன் கொதிக்க வைத்த தண்ணீரை சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்கும் போது கேசரி கட்டி ஆகாது. சாப்பிடவும் ரொம்ப பிடிக்கும். தண்ணீர் விட்டவுடன் நன்கு கிளறவும். பிறகு அதனுடன் வெட்டி வைத்துள்ள பைன் ஆப்பிள் துண்டு, ஏலக்காய் பவுடர், கேசரி பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி கொதிக்கவிடுங்கள்.
நன்கு கிளறி கொதிக்கும் போது அதனுடன் உங்கள் தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள். மீண்டும் நன்கு கிளறி, ஒரு மூடி கொண்டு நன்கு மூடி கொதிக்க விடுங்கள் (5 அல்லது 6 நிமிடங்களுக்கு).
சிறிது நிமிடங்கள் கழித்து கேசரி பதம் வந்தவுடன் அதாவது மெது மெது என்று இருக்கும் போது அதனுடன் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை போன்றவற்றை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். மீண்டும் அதனுடன் நெய் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து பைன் ஆப்பிள் ரவா கேசரி (pineapple rava kesari) பாத்திரத்தில் ஒட்டிக் கொள்ளாதவாறு கிளறி விடுங்கள்.
கிளறிய பைன் ஆப்பிள் ரவா கேசரியை (pineapple rava kesari) ஒரு பாத்திரத்தில் உங்களுக்கு பிடித்த விதத்தில் பரிமாறிக் கொள்ளுங்கள்.
இப்பொழுது சுவையான ரொம்பவே ஈஸியான பைன் ஆப்பிள் ரவா கேசரி (pineapple rava kesari) தயார்…
பன்னீர் கோலா உருண்டை செய்வது எப்படி..?
பார்த்துங்க உங்கள் குழந்தை, கணவர் சாப்பிட்டுவிட்டு திரும்ப திரும்ப கேட்க போறாங்க அப்புறம் …
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.