குல்பி ஐஸ் கிரீம் செய்வது எப்படி? | Kulfi Recipe

Advertisement

குல்பி ஐஸ் கிரீம் செய்வது எப்படி? | Kulfi Recipe

Kulfi Recipe in Tamil: சம்மர் சமையல் கொளுத்தும் கோடை வெயிலுக்கு உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இரண்டு சம்மர் கூல் ரெசிப்பிக்களை செய்து சாப்பிடலாம் வாங்க.

அதுவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சிறந்த ரெசிபியாக இருக்கும். என்ன ரெசிபி, எப்படி செய்ய வேண்டும் போன்றவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

இதையும் படிக்கவும்–>தேங்காய் கேக் செய்வது எப்படி ? – செய்முறை விளக்கம்..!

சம்மர் சமையல் – ஜிகர்தண்டா செய்முறை

ஜில் ஜில் ஜிகர்தண்டா அனைவருமே விரும்பி அருந்த கூடிய ஒரு சிறந்த பாணம். இந்த கொளுத்தும் கோடை வெயில்ல நாம கடைக்கு சென்றுதான் இந்த ஜிகர்தண்டா குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்ல. நாம் வீட்டிலேயே செய்துவிட முடியும். சரி வாங்க ஜில் ஜில் ஜிகர்தண்டா எப்படி செய்வது என்று இப்போது நாம் காண்போம்.

தேவையான பொருட்கள் | 8 Ingredients in Kulfi in Tamil:

  1. கடல் பாசி – சிறிது (அ) பாதான் பிசின் – கால் தேக்கரண்டி
  2. சர்க்கரை – தேவைக்கு
  3. பால் – 3 கப்
  4. ரோஸ் (அ) நன்னாரி சிரப் – ஒரு மேசைக்கரண்டி
  5. ஃப்ரெஷ் க்ரீம் – ஒரு மேசைக்கரண்டி [விரும்பினால்]
  6. ஐஸ்க்ரீம் – ஒரு ஸ்கூப்
  7. நட்ஸ் – சிறிது பொடியாக நறுக்கியது [விரும்பினால்]
  8. சமையல் பால் கோவா – 200கி

சம்மர் சமையல் – ஐஸ் கிரீம் செய்முறை

ஐஸ் கிரீம் தயாரிக்க

சம்மர் சமையல் முதலில் ஒரு கடாயில் சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வைத்துக்கொள்ளவும்.

ஜிகர்தண்டா ஐஸ் கிரீம் தயாரிக்க ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலுடன், சமையல் பால் கோவா மற்றும் சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துவிடவும்.

பின் மற்றொரு கிண்ணத்தில் இரண்டு டேபிள் ஸ்புன் பால் மற்றும் இரண்டு தேக்கரண்டி சோள மாவு சேர்த்து கரைத்து கொள்ளவும், கரைத்த இந்த கலவையை பால் கோவா சேர்த்த பாலில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பாலானது சோள மாவு சேர்க்கும் போது கெட்டி பதத்திற்கு வரும். அந்த சமையத்தில், இரண்டு ஸ்புன் சர்க்கரை பாகு மற்றும் கிரீம் 200 கிராம் சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின்பு அடுப்பில் இருந்து இறக்கி பாலை ஆற வைத்து, பின்பு ஒரு பவுலில் ஊற்றி இரவு முழுவதும் பிரிட்ஜியில் வைத்து குளிரூட்ட வேண்டும்.

தற்போது ஐஸ் கிரீம் செய்முறை முடிந்தது.

சம்மர் சமையல் – ஜிகர்தண்டா செய்முறை :

பாதாம் பிசின் பயன்படுத்தி செய்வதாக இருந்தால், பாதாம் பிசினை நன்றாக கழுவி நீரில் 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

கடல் பாசி கொண்டு செய்வதாக இருந்தால், கடல் பாசியை வழக்கம் போல் தயார் செய்து செட் ஆகும் போது கிளறி விடவும். அப்படி செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால் தூள் தூளாக வரும், நறுக்கும் வேலை இருக்காது. இதை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

பாலை திக்காக காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கரைந்ததும் ஃபிரிட்ஜில் வைக்கவும்.

ஒரு கப்பில் ஒரு மேசைக்கரண்டி கடல் பாசி போடவும். அதன் மேல் ரோஸ் (அ) நன்னாரி சிரப் ஊற்றவும். மேலே ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.

இதில் குளிர்ந்த பால் ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும்.

பாதாம் பிசின் என்றால் ஊற வைத்து ஜெல்லி போல் இருக்க வேண்டும்.

கப்பில் ஊறிய பாதாம் பிசின் போட்டு அதன் மேல் நன்னாரி சிரப் ஊற்றவும்.

இதில் குளிர்ந்த பால் ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும். சுவையான குளிர்ச்சியான ஜிகர்தண்டா ரெடி.

சுவையான ஜிகர்தண்டா செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டீர்களா?  வீட்டில் செய்து அசத்துங்கள்.

இதையும் படிக்கவும்–> வித்தியாசமான ருசியில் மரவள்ளிக் கிழங்கு புட்டு

சம்மர் சமையல் – குல்பி ஐஸ் கிரீம் செய்வது எப்படி?

சம்மர் சமையல் கொளுத்தும் வெயில்ல உங்களை குளிர வைக்க குளுகுளு குல்பி ஐஸ் எப்படி செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம் வாங்க..

தேவையான பொருட்கள்:

பால் – 2 லிட்டர்
பாதம் – 15 கிராம்
பிஸ்தா – 15 கிராம்
முந்திரி – 15 கிராம்
கார்ன்ப்ளேவர் – 1 மேசைக்கரண்டி
ஜெலட்டின் – 2 தேக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் – 1 தேக்கரண்டி
ஐசிங் சுகர் – 200 கிராம்

சம்மர் சமையல் குல்பி ஐஸ்க்ரீம் செய்முறை

முதலில் 2 லிட்டர் பாலை நன்கு வற்றக்கய்ச்சி 1 லிட்டர் பாலாக ஆக்கவும். பால் வற்றிவரும் போதே ஐசிங் சுகரை போட வேண்டும்.

பின் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது பாலை எடுத்து அதில் கார்ன்ப்ளேவரை கரைத்து பாலில் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து சிறிய தீயில் வைத்து கிளறவும்.

நன்கு கெட்டியானதும் இறக்கவும்.

பாதம், முந்திரி, பிஸ்தாவை தண்ணீரில் ஊறவைத்து சிறிது பாலை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

ஜலட்டினை 50 மில்லி சூடான தண்ணீரில் கரைத்துக்கொண்டு கெட்டியான பாலில் முந்திரி கலவை,ஜெலட்டின்,ரோஸ் எசன்ஸ் எல்லாவறையும் சேர்த்து நன்கு கலக்கி குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உறையவிடவும்.

சுவையான குளிர்ச்சியான குல்பி ஐஸ்க்ரீம் ரெடி.

இதையும் படிக்கவும்–> வாழைப்பழ கேக் செய்யலாம் !!! How to Make Banana Cake Tamil

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement