Sundakkai Poriyal Recipe In Tamil
நாம் என்ன தான் விதவிதமான குழம்புகள் வைத்தாலும் சைடிஷ் சுவையாக இருந்தால் இன்னும் நாலு கரண்டி சாதம் உள்ள போகும். அந்தளவுக்கு சாப்பாட்டில் சைடிஷ் தான் மெய்ண்டிஸாக உள்ளது. அதனால் குழம்புக்கு ஏற்றார் போல் சைடிஷ் செய்தால் நம் வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். சமைத்த உங்களுக்கும் நன்றாக சமைத்த பாராட்டுகளும் கிடைக்கும். அந்தவகையில் சுவையாக சுண்டக்காய் பொரியல் செய்வது எப்படி என பார்ப்போம். சுண்டக்காய் என்றதும் அதன் கசப்பு தான் நி=யாபகத்துக்கு வரும். அதனால் இதனை யாரும் சமையலில் சேர்ப்பதில்லை. சுண்டக்காய் நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. முக்கியமாக சர்க்கரை நோய் வராமல் இருக்கவும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கவும் இது உதவுகிறது. கசப்பு தெரியாமல் சுவையாக சுண்டக்காய் பொரியல் செய்வது எப்படி என பார்ப்போம்.
சுவையான சுண்டைக்காய் பொரியலுக்கு தேவையான பொருட்கள் :
- சுண்டக்காய் – 1 கப்
- கடுகு – 1 ஸ்பூன்
- உளுந்து – 1 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- சீரகத்தூள் – 1 ஸ்பூன்
- மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
- தனியாதூள் – 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
- கருவேப்பிலை – தேவையான அளவு
- வெங்காயம் – 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
- தக்காளி – 1
- தண்ணீர் – 1 பவுல்
சுண்டக்காய் பொரியல் செய்முறை :
- சுண்டக்காவை ஓரளவுக்கு இடிச்சி எடுத்து கொள்ளுங்கள் . பின் சுண்டக்காயை நன்றாக தண்ணீரில் அலசிக்கொள்ளுங்கள்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து,சீரகம், கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். சீக்கிரமாக வதங்க கொஞ்சமாக உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
- வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போறவரைக்கும் வதக்கி கொள்ளவும்.
- இப்போது தக்காளியை மிக்சியில் அரைத்து எடுத்து கொள்ளுங்கள். அதனை வதக்கிய வெங்காயத்தோடு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
- தக்காளியின் பச்சை வாசனை போரளவுக்கு நன்றாக வதக்கிகொள்ளுங்கள். தக்காளியின் பச்சை வாசனை போனபிறகு சுண்டக்காயை சேர்த்துக்கொள்ளுங்கள்.
- சுண்டக்காயின் பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள். சுண்டக்காய் வதங்குன பிறகு சீரகத்தூள், மிளகாய்த்தூள், தன்யாத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். இந்த டைம்ல உப்பு இருக்கானு பார்த்துக்கோங்க. எப்படி உப்பு பத்தவில்லைன்னா உப்பு தேவையான அளவு சேர்த்துக்கோங்க.
- அடுப்பை மீடியம் பேமில் வைத்து கொள்ளுங்கள். 3 நிமிடத்திற்கு கடாயில் ஒரு தட்டு போட்டு மூடி விடுங்கள் . 3 நிமிடத்திற்கு பிறகு சுண்டக்காய் வெந்துருக்கானு பார்த்துக்கோங்க. வேகவில்லை என்றால் இன்னும் 3 நிமிடம் வேகவிடுங்கள்.
- இப்போது கசப்பே தெரியாத சுவையான சுண்டக்காய் தயார். இதனை சாம்பார் மற்றும் ரசம் ஆகியற்றிக்கு எல்லாம் சைடிஸாக வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
கிராமத்து சுவையில் கசப்பே தெரியாத பச்சை சுண்டைக்காய் காரக்குழம்பு….!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |