ஆயுள் இரட்டிப்பாகுமாம் இந்த ஆவாரம் பூ டீ குடித்தால் – அதன் செய்முறை..!

ஆவாரம் பூ டீ 

ஆவாரம் பூ டீ செய்முறை மற்றும் பயன்கள் ..!

ஆவாரம் பூ டீ பயன்கள்: அற்புதம் மிகுந்த இந்த ஆவாரம் பூ நம் ஆயுளை அதிகரிக்க உதவுகின்ற ஒரு மருத்துவம் குணம் வாய்ந்தது. இந்த ஆவாரம் பூ நம் உடலில் ஏற்படும் பல ஆரோக்கிய பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. அதுவும் ஆவாரம் பூ டீ (Avarampoo Tea)குடிப்பதினால் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனையும் உடனே சரியாகும்…

சரி இந்த ஆவாரம் பூவை டீ (Avarampoo Tea)செய்து குடித்தால் என்ன நிகழும் என்று இந்த பகுதியில் நாம் காண்போம் வாங்க ..!

முதலில் நாம் ஆவாரம் பூவில், டீ (Avarampoo Tea) எப்படி செய்வது என்று பார்ப்போம், அதன்பிறகு ஆவாரம் பூ டீ பயன்கள் (Avarampoo Tea)பற்றி நாம் காண்போம்..!

10 அற்புதங்கள் நிகழும் இந்த தண்ணீரை குடித்தால் – அது என்ன ?

ஆவாரம் பூ டீ (Avarampoo Tea) செய்ய தேவைப்படும் பொருட்கள்:

  1. ஆவாரம் பூ (காயவைத்தது) – ஒரு கைப்பிடி அளவு
  2. தண்ணீர் – 1 1/2 டம்ளர்
  3. தேன் அல்லது நாட்டு சர்க்கரை – ஒரு ஸ்பூன்

ஆவாரம் பூ டீ செய்முறை (Avarampoo Tea) :

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அவற்றில் 11/2 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.

பின்பு தண்ணீரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

அதன் பிறகு ஆவாரம் பூவை அவற்றில் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்.

பின்பு அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். பின்பு அவற்றை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி கொள்ளவும்.

பிறகு அவற்றில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகவும்.

சரி இப்போது ஆவாரம் பூ டீ பயன்கள் (Avarampoo Tea)பற்றி இப்போது நாம் காண்போம்..!

ஆவாரம் பூ டீ பயன்கள் (Avarampoo Tea Use)..!

மலச்சிக்கல்:

மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம்.

ஆனால் இந்த மலச்சிக்கல் தான் பல நோய்கள் உண்டாவதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது.

ஒரு நாளைக்கு இரண்டு முறை உடலில் இருந்து மலம் வெளியேறினாலே போதும் நம்முடைய உடலில் நோய்கள் அண்டாது.

மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்தால், இந்த பிரச்சினையே அடியோடு காணாமல் போய்விடும்.

சருமத் தொற்றுகளுக்கு:

நம்முடைய சருமத்திலும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகும். இதுபோல் உண்டாகிற சரும பூஞ்சைத் தொற்றை சரி செய்ய வேண்டுமென்றால், ஆவாரம் பூவை அரைத்து சருமத்தில் தடவலாம் அல்லது ஆவாரம்பூ டீ செய்து உள் மருந்தாகவும் குடிக்கலாம்.

சிறுநீர் தொற்று:

ஆவாரம்பூ டீ செய்து குடித்தால் சிறுநீர் பாதையில் உண்டாகும் தொற்று நோய்கள் குணமடையும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

இரத்தம் பெருகும். உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சிறுநீர் கடுப்பு குணமடையும்.

காய்ச்சலுக்கு:

அதிகப்படியான மருத்துவ குணங்கள் கொண்ட ஆவாரம் பூ டீ (avarampoo tea) தினமும் தொடர்ந்து பருகி வந்தால், காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் குணமடையும். தீராத காய்ச்சலும் தீர்ந்து போகும்.

நீரிழிவு நோய்:

இப்போதேல்லாம் பலர் சிறு வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார்கள். அப்படி சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆவாரம் செடியினுடைய பட்டையானது சிறந்த தீர்வாக இருக்கும்.

ஆவாரம் பட்டையை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வர, சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேகவெட்டு, சிறுநீரில் ரத்தம் கசிதல் ஆகிய பிரச்சினைகளையும் தீர்க்கும்.

இதற்கு காய்ச்சும்போது, பட்டையைப் போட்டு, நன்கு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.

வயிற்றுப்பூண் குணமாக:

காய வைத்து பொடி செய்த ஆவாரம் பூ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகி வந்தால், உடல்சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, அதிக உதிரப் போக்கு ஏற்படுதல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குடல்புண், வயிற்றுப்புண் என வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனையையும் இந்த ஆவாரம்பூ டீ (avarampoo tea) குணப்படுத்திவிடும்.

இத்தனை இருக்குதா ஆவாரம் பூவில்..? அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்