கேரளா ஸ்டைல் டேஸ்டி சிக்கன் ரோஸ்ட்

Advertisement

Tasty Chicken Roast in Tamil

அசைவ பிரியர்கள் அனைவருக்கும் ருசியான வணக்கம்.. இன்று நாம் சமையல் குறிப்பு பதிவில்.. கேரளா ஸ்டைல் டேஸ்டி சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி பார்ப்பதற்கும் கண்களை கவரும்.. சாப்பிடுவதற்கு நாக்கை தாளம்போட வைக்கும்.. அந்த அளவிற்கு இந்த ரெசிபியின் சுவை தூள் கிளப்பும். இந்த கேரளா ஸ்டைல் டேஸ்டி சிக்கன் ரோஸ்ட் ரெசிபியை சாதம், பூரி, சப்பாத்தி, தோசை மற்றும் இட்லி போன்ற உணவுகளுக்கு தொட்டுக்கொள்ளலாம். சரி வாங்க இந்த ரெசிபி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. சிக்கன் – ஒரு கிலோ
  2. பெரிய வெங்காயம் – 3 அல்லது 4
  3. தக்காளி – 2
  4. இஞ்சி – இரண்டு துண்டு
  5. பூண்டு – 8 பற்கள்
  6. மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
  7. கொத்தமல்லி தூள் – 1 1/2 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  9. கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
  10. பெருஞ்சீரக தூள் – 1 ஸ்பூன்
  11. பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
  12. உப்பு – தேவையான அளவு
  13. ஆயில் – 3 டேபிள் ஸ்பூன்
  14. தயிர் – 50 கிராம்
  15. பச்சை மிளகாய் – 4

Kerala Style Chicken Curry in tamil

செய்முறை விளக்கம்:

சுத்தமாக கழுவி சிக்கனை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

பிறகு அதில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், சிறிதளவு மிளகாய் தூள் மற்றும் தயிர் 1/4 கப் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து 30 நிமிடம் ஊறவைக்கவும். அதற்குள் வெங்காயம், தக்காளி,  பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடிதாக நறுக்கி வைக்கவும். இஞ்சி பூண்டு விழுது அரைத்து வைக்கவும்.

30 நிமிடம் கழித்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடேற்றவும்.

எண்ணெய் சூடானதும் ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை சேர்த்து பொரியவிட வேண்டும். பெருஞ்சீரகம் நன்கு பொரிந்து வந்ததும், அதில் நறுக்கி வைத்த பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாவை சேர்த்து வதக்கிவிடவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்துவைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடம் கழித்து அதனுடன் இரண்டு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை நீங்கிய பின் அதில் நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

இரண்டு நிமிடம் கழித்து ஏற்கனவே மசாலாவில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து 5 நிமிடம் கிளறிவிடுங்கள்.

5 நிமிடம் கழித்து தேவையான அளவு உப்பு மற்றும் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு முறை கிளறிவிடுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மிகவும் ருசியான யாழ்ப்பாணம் சிக்கன் வறுவல் செய்வது எப்படி..?

பிறகு கடாயை மூடி 5 நிமிடம் கறியை வேகவைக்கவும். 5 நிமிடம் கழித்து மூடியை திறந்து ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் தூளை சேர்த்து கிளறிவிடவும்.

பின் அவற்றில் இருக்கும் தண்ணீர் முழுவதும் தீரும் வரை அவ்வப்போது கிளறிக்கொண்டே இருங்கள். சிக்கனில் ஓரளவு தண்ணீர் வற்றிய பிறகு அடுப்பை அணைத்து வேறொரு பாத்திரத்திற்கு சிக்கனை மாற்றி அனைவருக்கும் பரிமாறுங்கள். நன்றி வணக்கம்..

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement