தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி? | Thakkali Illamal Kulambu Seivathu Eppadi?
கடுமையான மழை காரணமாக தக்காளியின் விலை தற்பொழுது 130 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை உயர்வு காரணமாக மக்கள் தக்காளி வாங்கவே அதிகம் யோசிக்கின்றன. தக்காளி இல்லாமல் சமைத்துவிடலாம் என்றும் நினைக்கின்றன. அந்த வகையில் இந்த பதிவில் தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி என்று பார்ப்போம். இந்த குழம்பில் தக்காளி இல்லையென்றாலும் சுவை மிகவும் நன்றாக இருக்கும். சரி வாங்க தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி என்று கீழ் காண்போம்.
தேவையான பொருட்கள்:
- கடுகு – 1 டீஸ்பூன்
- வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
- பெருங்காயம் தூள் – சிறிதளவு
- சின்ன வெங்காயம் – 1/2 கப்
- பூண்டு – 1/4 கப்
- உப்பு – தேவையான அளவு
- கருவேப்பிலை – ஒரு கொத்து
- குழம்பு மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- புளி – ஒரு எலுமிச்சையளவு
- ஆயில் – தேவையான அளவு
மசாலா அரைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள்:
- மிளகு – ஒரு ஸ்பூன்
- துவரம்பருப்பு – ஒரு ஸ்பூன்
- உளுத்தப்பருப்பு – ஒரு ஸ்பூன்
- மல்லி – ஒரு ஸ்பூன்
- சீரகம் – ஒரு ஸ்பூன்
தக்காளி இல்லாமல் சட்னி செய்வது எப்படி |
தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி?
செய்முறை விளக்கம் – Thakkali Illamal Kulambu Seivathu Eppadi:
ஸ்டேப்: 1
அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிதளவு ஆயில் ஊற்றிக்கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிவிடுங்கள்.
ஸ்டேப்: 2
பின் சின்ன வெங்காயம், மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் மற்றும் பூண்டு நன்கு வதங்கியதும் ஒரு ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கிவிடுங்கள்.
ஸ்டேப்: 3
பின் ஒரு எலுமிச்சை அளவுள்ள புளி எடுத்து அதனை ஊறவைத்து நன்கு கரைத்து கொள்ளுங்கள். கரைத்த இந்த புளியை அடுப்பில் வதக்கி வைத்துள்ள கலவையுடன் சேர்த்து கலந்து விடுங்கள், பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். குழம்பு கொதித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் நாம் மசாலா ஒன்று அரைப்போம் வாங்க.
ஸ்டேப்: 4
அடுப்பில் ஒரு கடாய் வைத்து மிளகு – ஒரு ஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு ஸ்பூன், உளுத்தப்பருப்பு – ஒரு ஸ்பூன், மல்லி – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு மிக்சியில் பவுடர் போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 5
அரைத்த பவுடரை கொதித்துக்கொண்டிருக்கும் குழம்பில் சேர்த்து கலந்துவிடுங்கள். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கினால் சுவையான குழம்பு தயார். உங்கள் வீட்டில் ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள் நன்றி..
தக்காளி இல்லாமல் ரசம் எப்படி வைப்பது |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |