தக்காளி சாதம் செய்வது எப்படி தமிழ் | Tomato Rice Recipe in Tamil
சாதரணமாகவே பெண்களுக்கு சாப்பாட்டை எளிமையாகவும், ருசியாகவும் செய்து கொடுக்க தான் பிடிக்கும். அதிலும் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்களுக்கு மதிய உணவு ருசியாக இருந்தால் தான் சாப்பிட பிடிக்கும். பல பெண்கள் என்ன சாப்பாடு செய்து கொடுப்பது என்று யோசித்து குழம்பி விடுவார்கள். இனி இல்லத்தரசிகள் யாரும் குழம்ப வேண்டாம். இந்த பதிவில் இல்லத்தரசிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் தக்காளி சாதம் எப்படி? ருசியாகவும், எளிமையாகவும் செய்து கொடுக்கலாம் என்று படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- கடலை எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் – 4
- சீரகம் – அரை டேபிள் ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- முந்திரி பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- கருவேப்பிலை – தேவையான அளவு
- வெங்காயம் – 2 (நறுக்கியது)
- பூண்டு – 2 (நறுக்கியது)
- தக்காளி – 2 (நறுக்கியது)
- காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2 (கீறியது)
- தண்ணீர் – 250 ml
- உப்பு – தேவையான அளவு
- பெருங்காயம் – அரை டேபிள் ஸ்பூன்
- நெய் – 2 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி – தேவையான அளவு (நறுக்கியது)
- அரிசி – தேவையான அளவு
செய்முறை:
ஸ்டேப்: 1
Thakkali sadam seivathu eppadi: தேவையான அளவு அரிசி எடுத்து அதனை கழுவி கொள்ளவும். பின் அந்த அரிசியை குலைந்து போகாத அளவிற்கு வேகவைத்து கொள்ளவும்.
ஸ்டேப்: 2
Tomato Rice Recipe in Tamil: பின் ஒரு கடாயில் 3 டேபிள் ஸ்பூன் அளவிற்கு கடலை எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடான பிறகு 1 டேபிள் ஸ்பூன் கடுகு, 4 சிவப்பு மிளகாய், அரை டேபிள் ஸ்பூன் சீரகம், 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் முந்திரி பருப்பு, கருவேப்பிலை சேர்த்து கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை வதக்கவும்.
தக்காளி இல்லாமல் ரசம் எப்படி வைப்பது? |
ஸ்டேப்: 3
தக்காளி சாதம் செய்வது எப்படி?: பின் அதில் நறுக்கிய வெங்காயம் 2, நறுக்கிய பூண்டு 2 சேர்த்து கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை வதக்கவும். கோல்டன் பிரவுன் கலர் வந்தவுடன் நறுக்கிய தக்காளி 2 சேர்த்து மசித்து வதக்கவும்.
ஸ்டேப்: 4
Tomato Rice Recipe in Tamil: பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், கீறிய பச்சை மிளகாய் 2 சேர்த்து மிக்ஸ் பண்ணவும். பின் அதில் 250 ml தண்ணீர் சேர்த்து 8-10 மினிட்ஸ் கொதிக்க வைக்கவும்.
ஸ்டேப்: 5
Thakkali sadam seivathu eppadi: கொதித்த தண்ணீர் வற்றிய பிறகு அதில் தேவையான அளவு உப்பு, அரை டேபிள் ஸ்பூன் பெருங்காயம் சேர்த்து கிண்டவும். பின் அதில் நறுக்கிய கொத்தமல்லி, 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து மீடியம் flame-ல் வைத்து மிக்ஸ் பண்னவும்.
பின்னர் அதில் வேக வைத்த சாதத்தை சேர்த்து மிக்ஸ் பண்ணவும். இப்போது சூடான சுவையான தக்காளி சாதம் தயார்.
மாங்காய் சாதம் மிக சுவையாக செய்வது எப்படி? |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |